மௌரியரும் குஷாணரும் ஹூணர்களும் ஆதியில் காஷ்மீரை ஆண்டனர். அசோகரும் கனிஷ்கரும் காஷ்மீரில் புதிய நகரங்களை நிறுவினர் என்று தெரியவருகிறது.
தோரமாணரும்,மிகிரகுலரும் கொடிய அரக்கர்களைப்போல் காஷ்மீரை கட்டிகாத்தனர் என்று பல கதைகளைக் கல்ஹணர் எழுதுகிறார்.
(கல்ஹணர் 12நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியர்)
ஆனால் இக்காலத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. குப்தர்கள் காலத்தில் ‘கொணந்த‘ (Gonanda) வம்சம் காஷ்மீரத்தை ஆண்டனர்.
(‘கொணந்த’வம்சத்தினர் கண்ணந்தை குல கொங்கு வெள்ளாளர்களாக இருப்பார்களோ??)
இந்த வம்சத்தின் முழுவரலாறும் கல்ஹணருக்குக் கிடைக்கவில்லை. எனவேதான் குப்தர்களின் காலமான 300 ஆண்டுக் காலத்தில் ஒரே ஒரு கொணந்த அரசர் காஷ்மீரத்தில் ஆட்சிபுரிந்ததாகக் கல்ஹணர் எழுதுகிறார். அடுத்த 80 ஆண்டுகளில் இரண்டு அரசர்கள் (இரு சகோதரர்கள்) ஆண்டனர் என்கிறார் அவர்.
1. கார்க்கோட வம்சம்
கொணந்த வம்சத்தின் கடைசி அரசர் பாலாதித்தியர் என்பவர். இவருக்கு ஒரு மகள் மட்டுமே உண்டு. இந்த மகளை மணந்த துர்லப வர்த்தனன் (Durlabha vardhanan) என்பவர் காஷ்மீரின் அரசரானார். இவர் கி.பி. 626ஆம் ஆண்டுவாக்கில் அரியணையேறினார் என்று தெரிகிறது.
இவர்கார்க்கோட வம்சம் அல்லது கார்க்கோட நாகவம்சத்தைச் சேர்ந்தவர். தொடரும்…
Hair care,Skin Care,Mens care,Knee care,Health care 60+ products available…👇🙏 9486670210
Health is wealth. Check out our catalog