You are currently viewing இருட்டுக்கடை அல்வா

இருட்டுக்கடை அல்வா

திருநெல்வேலின்னு சொன்னதும் நெல்லையப்பர் ஞாபகம் வராரோ இல்லையோ, கண்டிப்பா எல்லாருக்குமே இருட்டுக்கடை அல்வா ஞாபகத்துக்கு வரும்.

  கடையின் வரலாறு.

           திருநெல்வேலியை சேர்ந்த சொக்கம்பட்டி ஜமீன்தார் ஒருமுறை வட மாநிலத்திற்கு ஆன்மீக பயணம் போகிறார். அப்போது அங்கே ஒரு குடும்பம் தயாரித்த அல்வாவை சுவைக்கிறார்.அந்த சுவை அவருக்கு ரொம்ப பிடித்து போய் விட்டது.அதனால் அந்த குடும்பத்தை அப்படியே திருநெல்வேலிக்கு கூட்டிட்டு வந்துவிட்டார். ஜமீந்தார் கூட்டிட்டு வந்தவருடைய பெயர் பிஜிலி சிங்.1900 காலகட்டத்தில் இந்த பிஜிலி சிங் தான் இருட்டு கடை அல்வாவை ஆரம்பித்ததாக சொல்கிறார்கள்.மூன்று தலைமுறைகள் தாண்டியும் இந்த கடை வெற்றிகரமா நடந்து கொண்டுயிருக்கிறது. 1900 காலகட்டங்களில் இந்த கடை எப்படி இருந்ததோ அதே மாதிரி தான் இப்போது வரை உள்ளது. இவர்கள் ஆரம்பிக்கும்போது மின்சார விளக்கு இல்லாமல் ஒரே ஒரு கண்டா விளக்கு மட்டும் தான் பயன்படுத்திட வந்தாங்களாம், இப்போ ஒரே ஒரு இருபது வாட்ஸ் பல்பு மட்டும் தான் கடையில இருக்கு அப்படின்னு சொல்றாங்க.

கடை திறக்கும் நேரம்🚪

மாலை 5 மணிக்குதான் கடையை திறப்பார்கள். கடை திறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இருந்தே கூட்டம் அலைமோத ஆரம்பித்துவிடும்.

இந்த கடை எங்கு உள்ளது?

நெல்லையப்பர் கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் இந்த கடை இருக்கிறது. அங்கு இந்த ஒரு கடையில் மட்டும்தான் கூட்டம் அதிகமாக இருக்கும் அதை வைத்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம் இதுதான் இருட்டுக்கடை என்று. 28.12.2021 அன்றைய தேதியின்படி இங்உ ஒரு கிலோ அல்வாவின் விலை 260உரூபாய்.இங்கு Debit card 💳,gpay,paytm,online transfer எதுவும் கிடையாது,கையில் காசு பையில் அல்வா அதனால் மறக்காம பணத்தை மட்டும் கொண்டு போங்க. வாழ்க தமிழ் வளர்க தமிழ்,நன்றி🙏💞😇

Leave a Reply