தமிழ் கடவுளை வழிபடும் மெக்சிகோ மக்கள்

போதிதர்மர் இங்கிருந்து சீன நாட்டிற்கு போனது போல், தமிழ் நாட்டின் மழைக் கடவுள் மெக்சிகோவிற்கு போனதற்கான ஆதாரம். ஐந்து பூதங்களையும் வழிபடும் முறை தமிழர்களுக்கு உண்டு. நமக்கு மழை கடவுள் இந்திரன், மெக்சிகோவில் tlalco கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆலப்பட்டி காலனி ஊரிலுள்ள…

Continue Readingதமிழ் கடவுளை வழிபடும் மெக்சிகோ மக்கள்

மாவளி சுற்றுதல்:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம் அருகில் ஐகொத்தப்பள்ளி எனும் ஊரில் உள்ள சிறிய குன்றில் பெருமாள் கோவிலும் முருகர் கோவிலும் இருக்கிறது. இந்த முருகர் கோவிலுக்கு பின்புறம் உள்ள பெரும்பாறைக்கு அடியில் 100 க்கும் மேற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் இருக்கிறது. இந்த ஓவியங்களின் வயதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகின்றனர். இந்த ஓவியத்தில் மிக முக்கியமானதாக ஒரு சில விலங்குகளின் உருவமும் பெண்ணின் உருவமும் மாவளி சுற்றும் ஓவியம் உள்ளது. இந்த குகையில் 4 உருவங்கள் மாவளி சுற்றுவது போலும், ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வணங்குவது போன்ற ஓவியமும் உள்ளது.இந்த மாவளி சுற்றுதல் என்பது தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றும் இந்த மாவளி சுற்றப்பட்டு வருகிறது.  இதற்கு ஒரு பனைமரத்தை முதலில் தேர்வு செய்கிறார்கள் அது ஆண் பனை மரம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஆண் பனை மரத்தில் உள்ள பூவை எடுத்து உலர்த்தி பின் ஒரு சிறு குழி தோண்டி அதில் அந்தப் பூவை வைத்து நெருப்பு மூடப்படுகிறது. பின்பு அதனை மூடி விட்டு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் அந்த குழியிலேயே அந்த பூ வைக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் பனை மட்டையை உரித்து அதை நான்காக பிரிக்கப்படுகிறது. புதைத்து வைக்கப்பட்ட பனை பூவை எடுத்து அதை அம்மியில் வைத்து இடித்து தூளாக்கி அதை ஒரு துணியில் வைத்து தேவையான அளவு கட்டி விடுகிறார்கள். அந்த துணியை எடுத்து இந்த பனை அட்டையில் வைத்து கட்டி விடுகிறார்கள். பின்பு அந்த துணியில்  நெருப்பு வைத்து மாவளி சுற்ற படுகிறது. மாவளி சுற்றும்போது மாவளியோ மாவளி என்று கூச்சல் இடுவார்கள் இதற்கு மாவளி சுற்றுதல், கார்த்திகை சுற்றுதல் என்று வெவ்வேறு பெயர்கள் உள்ளன.5000 வருடங்களுக்கு முன் இருந்து தொடரும் தமிழரின் மரபு. வாழ்க தமிழ் வளர்க தமிழ் நன்றி.

Continue Readingமாவளி சுற்றுதல்:-