தமிழர்களின் வரலாற்றை தேடி, இது தமிழர் தடதின் பயணம், வணக்கம் நான் குமரன்
யானைகள் நிறைந்த அடர்ந்த காட்டிற்குள் நம்ம ஒரு இசை பாறையை தேடி போகிறோம்.
இந்த இசை பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் மில்லிதிக்கி என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த பாறை வரலாற்றுக்கு முந்தைய காலம் அப்படினு சொல்றாங்க.வரலாறு பற்றிய காலத்தை நாம் இரண்டாக பிரிக்கலாம் 1. வரலாற்று காலம் 2.வரலாற்றுக்கு முந்தைய காலம். Ringing rock video.
1. வரலாற்று காலம்
இந்த வரலாற்று காலத்தில் வரலாறுக்கான சான்று இருக்கும்.
2.வரலாற்றுக்கு முந்தைய காலம்
ஆனா இந்த வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் எந்த ஒரு சான்றும் இருக்காது.இந்த வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் எச்சங்கள் கற்படுகை, கற்திட்டை,இரும்பு ஆலை இருக்கிறது.
இந்த அடர்ந்த காட்டுக்குள் கரடு முரடான பாதையில் கொஞ்சம் பதட்டத்தோடு தான் நான் மலை ஏறுகிறேன், இது யானைகள் நடமாடும் காடு. ஒரு 15 நிமிடம் மலை ஏற்றதிறுக்கு பிறகு மலை உச்சிக்கு வந்துவிட்டோம். அவ்ளோ கடினம் இல்லை.
நாம மேல வந்ததும் இந்த பாறை நாமல வரவேற்கும். இந்த பாறையை நன்றாக பார்த்தால் தூக்கி வச்ச மாதிரி இருக்கிறது. இந்த பாறை தான் நம்ம தேடி வந்த இசை பாறை. நான் இங்க இருந்த அனைத்து பாறையையும் பார்த்தோம். ஆனால் இந்த பாறையின் சத்தம் மட்டும் வித்தியாசமானதாக இருந்தது. இந்த பாறையில் இருந்து வருகிற டிங் டிங் சத்தம் இந்த மலை சுத்தி கேக்கும்னு இந்த ஊரில் வசிக்கின்றவர்கள் சொல்கிறார்கள்.
என்னுடைய யூகம் இது அந்த காலத்தில் அபாயமணியாக பயன்படுத்திருப்பாங்க. இந்த பாறையில் இருக்கின்ற குழி உலகம் முழுவதும் பரவலாக காணப்பட்டாலும், இசை பாறையில் காணப்படுவது இங்க தான் முதல் முறை. என்னுடைய மற்றொரு யூகம் இந்த குழி உலோகத்தை தாங்கள் நினைக்கும் வடிவத்திற்கு மாற்றுவதற்கு செய்த முயற்சியால் ஏற்பட்டிருக்கும் அப்படிகிறது . இந்த மாதிரியான பாறைகள் ரங்க மலை மற்றும் இன்னும் சில இடங்களில் காணப்படுகிறது. இந்த பாறையை மணிகல் என்றும் சொல்கிறார்கள். ஏன் இந்த மாதிரி சத்தம் வருகிறது என்று ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டால. அவர்கள் பதில் ஒவ்வொரு பாறைக்கும் ஒரு அடர்த்தி இருக்கிறது அதில் அடர்த்தி குறைந்த பாறைகளில் இருந்து இந்த மாதிரியான சப்தங்கள் வரும் என்று கூறுகிறார்கள்.
சரி எது எப்படியோ இந்த மாதிரி ஒரு ஆச்சரியமான தகவலை உங்களிடம் பகிர்ந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி.
இதே மாதிரி அடுத்த வலைப்பதிவில் சந்திக்கிறேன்.
நன்றி