உங்களுக்கு தெரியாத சுவாரசியமான தகவல்கள்
முதல் மின்சார விளக்கு
உலகில் முதன் முதலாக மின்சார விளக்கு எரியத் தொடங்கி இப்போது 144 ஆண்டுகளாகின்றன. அமெரிக்காவில் மென்லோ பார்க் நகரில் ஸாரா ஜோர் டான் என்ற பெண்மணி நடத்திய உணவு விடுதியில்.1879-ல் முதல் மின்சார விளக்கு எரிந்தது. விளக்கைக் கண்டு பிடித்த தாமஸ் எடிஸன் தமது ஆராய்ச்சி நிலையத்தையும் உணவு விடுதியின் சாப்பாட்டு அறையையும் கம்பிகள் மூலம் இணைத்து விளக்கை எரிய வைத்துப் பார்த்தார். அதுவே முதல் விளக்கு.
நகரும் நாடு
பிரிட்டன் வட துருவத்தை நோக்கி 2 அங்குலம் நகர்ந்து கொண்டிருக்கிறதாம்.நகர்வதோடு நிற்காமல் கடந்த 15கோடி ஆண்டு காலத்தில் ஏறக்குறைய 34° டிகிரி திரும்பி இருக்கிறது.
இரும்பு தாது
உலகத்திலேயே நம் நாட்டில் எடுக்கப்படும் இரும்பில்தான் 55-70% உலோகம் உள்ளது.உற்பத்தி செலவும் குறைவு.
மின்னல் ஒளி.
ஆகாயம் முழுவதும் பரவும் மின்னல் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் மின்னும்.
சூரியனுக்கு கோவில்
இந்தியாவில் மூல்டான் என்ற இடத்தில் சூரியனுக்கு முதல் கோவில் கட்டப்பட்டது.இக்கோவில் ஔரங்கசிப் காலம் வரை அழியாமல் இருந்தது.
உயரமான நாடு
உலகிலேயே மிகவும் உயரமான இடத்திலுள்ள நாடு திபேத் தான். இது கடல் மட்டத்துக்கு பதினோராயிரம் அடிக்கு மேல் உள்ளது. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இந்நாடு ஏழுலட்சம் சதுரமைல் பரப்புள்ளது. இங்கு நல்ல நீர் ஏரிகளும், உப்பு நீர் ஏரிகளும் அருகருகே இருப்பது ஒரு அதிசயம். மூன்று பெரும் நதிகள் இங்கு உற்பத்தியாகின்றன.
சங்கீத சிறப்பு
ராக ஆலாபனம் இந்திய சங்கீதத்துக்கு மட்டுமே ஒரு தனிப் பெருமை. வேறு எந்த நாட்டு இசை அமைப்பிலும் இதைக் காண முடியாது.
இந்திய மொழிகள்
இந்தியாவில் 845 மொழிகளைப் பேசும் மக்கள் உள்ளனர். இவற்றில் 720 மொழிகளைப் பேசுவோர் ஒரு லட்சம் பேருக்கும் குறைவானவர்கள்.
ரேடியம்
ரேடியம் பொருள்களையும் கடினமான ஒளிக்கதிர்கள் எத்தகைய துளைக்கக் கூடியவை. வேறு சில சக்தி களும் இதற்கு உண்டு. நீரைப் பிரிக்கும். கண்ணாடியை நிறம் உடையதாக்கும். வளையும் ரப்பரை ஒடியும் பொருளாக்கும். வைரங்களைப் பல நிற ஒளி வீசச் செய்யும்.
அது ஒன்றே
துறவைவிட இல்லறமே நல்லது என்று போதிக்கும் மதம் சீக்கிய மதம் ஒன்று மட்டுமே யாகும்.
முதல் ரயில்வே
இந்தியாவில் முதல் ரயில்வே போடப்பட்டது 1853-ம் ஆண்டில். அவ்வருடம் ஏப்ரல் 16-ந்தேதி பம்பாய்க்கும் கல்யாணுக்குமிடையே ரயில்பாதை போடப் பட்டது.
பெரிய முத்து
இதுவரை எடுக்கப்பட்ட முத்துக்களில் உலகிலேயே மிகப் பெரியது 1888 தானிய எடையுள்ளது. ஐந்து தானிய எடையுள்ள முத்தின் விலை சுமார் ரூ. 1220 ஆகும். (1960-ஆம் ஆண்டின் விலை)
பழைய பத்திரிகை
உலகத்திலேயே மிகவும் பழைய பத்திரிகை பீகிங் நகரீலிருந்து வெளிவரும் ‘சிங் – பாவோ’ என்ற சர்க்கார் பத்திரிகைதான். அச்சுயந்திரம் வருவதற்குமுன் இதைக் கையால் எழுதி நகல் எடுத்தார்கள். ஆரம்ப இதழ் முதல் இது தொகுத்து வைக்கப்பட்டுள்ளது.
Interesting facts you didn’t know
First electric light
It has been 144 years since the first electric light was lit in the world. In America
The first electric light was lit in 1879 in a restaurant run by a woman named Sarah Jordon in Menlo Park. When Thomas Edison discovered the light bulb, he connected his research station and the dining room of the cafeteria with wires and kept the light on. That was the first light.
A moving country
Britain is moving about 2 inches towards the North Pole.It has been moving non-stop and has turned around 34° degrees over the past 15 million years.
Iron ore
55-70% of the iron produced in our country is in the world. Production cost is also low.
lightning light
Lightning flashes across the sky in one-thousandth of a second.
First sun temple
The first temple to Surya was built at Multan in India. This temple remained intact till the time of Aurangzeb.
High altitude country
Tibet is the highest country in the world. It is more than eleven thousand feet above sea level. Surrounded by mountains, this country covers an area of seven lakh square miles. It is a wonder that there are fresh water lakes and salt water lakes side by side. Three major rivers originate here.
Sangeet speciality
Raga Alapanam is a unique pride of Indian music. This cannot be found in any other country music system.
Indian languages
There are 845 languages spoken in India. Of these, 720 languages are spoken by less than one lakh people.
Radium
Radium materials are also hard
How penetrating are the rays of light? It also has some other powers. separates water. Discolors the glass. Bending makes rubber brittle. Makes diamonds shine in many colors.
It’s the same
Sikhism is the only religion that teaches that home life is better than asceticism.
First Railway
The first railway in India was laid in 1853. On April 16 of that year, the railway line was laid between Bombay and Kalyan.
Big pearl
The world’s largest pearl ever mined weighs 1888 grains. A pearl weighing five grains costs around Rs. 1220 is (1960s price)
First magazine
The oldest newspaper in the world is the government newspaper ‘Ching-bao’ published in Beijing. Before the advent of the printing press, this was handwritten and copied. It has been compiled since the initial issue.