அனைவருக்கும் வணக்கம்,என் பெயர் குமரன் நான் படித்தது இயந்திரவியல். என்னதான் நான் இயந்திரவியல் பற்றி படித்து இருந்தாலும் தமிழின் மேல் எப்பொழுதும் ஒரு தனி ஆர்வம் எனக்குள் இருந்தது.அதே ஆர்வம் என் வாழ்வின் குறிக்கோள் ஆனது ஒரு சிறிய சம்பவத்திற்கு பிறகு,ஒரு நாள் ஒரு பிரபல தமிழ் வார பத்திரிகை படித்துக்கொண்டிருந்தேன் அதில் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் சிறப்பான உணவு பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது.அதை பார்க்கும் போது எனக்குள் ஒரு கேள்வி ? வந்தது.ஒவ்வொரு ஊரின் சிறப்பு வெறும் உணவில் மட்டுமா அடங்கியுள்ளது,ஒவ்வொரு ஊரிலும் ஏகப்பட்ட வரலாற்று சிறப்புகள் புதைந்து உள்ளது.பெரிய ஊர்களில் உள்ள வரலாறுகள் உலகறிந்தது ஆனால் சிறிய ஊர்களில் வரலாறு நிறைய பேருக்கு தெரிவதில்லை, சிற்றூர்களிலும் மலைகளிலும் பாறை ஓவியங்களும்,கோவில்களும்,கோட்டைகளும்,கல்வெட்டுகளும் ஏராளமாக உள்ளது.நம்முடைய இந்த சிறப்புகளை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை.இந்த எண்ணம் தோன்றிய அடுத்த நாளே எனது ஊரில் இருக்கும் சிறு சிறு குன்றுகளில் ஆராய தொடங்கினேன் ,ஒரு சில புத்தகங்களையும் படிக்க தொடங்கினேன்,அதிலிருந்த குறிப்புகளை வைத்து பாறை ஓவியங்களை பார்க்க நேர்ந்தது அதில் ஒரு பாறை ஓவியம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. நான் பார்த்த ஒவ்வொரு வரலாற்றுச் சுவடுகளும் என்னை மலைக்க வைத்தது,அதன் பிறகுதான் நான் பார்த்த அனைத்து வரலாற்று தகவல்களை மற்றவர்களும் காண வேண்டும் என்று நினைத்து TAMILAR THADAM என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்தேன். தமிழின் வரலாற்றையும் சிறப்பையும் TAMILAR THADAM சொல்லிக் கொண்டே இருக்கும்.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் நன்றி🙏💞😇