அங்குத்தி சுனை

பத்து உரூபாய்ல தரமான சுற்றுலா இடம்.

Drone shot visual link

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து 14km தொலைவில் கோவிந்தாபுரம் என்ற இடத்தில் இந்த அருவி உள்ளது.

ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை உள்ளது இதுவும் சிறிய சுற்றுலாத்தலம்.

வேலூர் வன மண்டலம் திருப்பத்தூர் வனக்கோட்டம் சிங்காரப்பேட்டை வனச்சரகம் சூழல் சார்ந்த சுற்றுலாத்தலம்.

காலை 9-3.30 வரை இங்கு செல்ல அனுமதி உண்டு.கரடி நடமாட்டம் உள்ளதாக ஊர் மக்கள் சொல்கின்றனர்.

Ticket வாங்கி இடத்தில் இருந்து 20நிமிடம் காட்டுக்குள் செல்லும் அனுபவம் thrillingஆ இருக்கும். சின்ன water crossing வரும்

Bike,car,share auto அருவி செல்லலாம். ஒரு நபருக்கு 10ரூ, வண்டிக்கு 20, car 50.

குடும்பத்துடன்,நண்பர்களுடன் செல்ல அருமையான சுற்றுலாத்தலம். சலிக்கும் வரை தண்ணில ஆட்டம் போடலாம். Plastic bags அனுமதியில்லை.

இங்குள்ள பாறைகள் வழுக்கும் கம்பியை பிடித்து பாதுகாப்பாக போகவும்.இது போன்ற இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது நம் கடமை.