பஞ்சாமிர்தமும் ஆசீவகமும்

பஞ்சாமிர்தம் மூலம் உடலை காக்கும் சூட்சமத்தை கூறிய ஆசீவக சித்தர்கள்.

உணவு என்பது குறிப்பிட்ட காலம் அல்லது நேரம் வரை மட்டுமே நன்றாக இருக்கும்,பின் கெட்டுவிடும்.ஆசீவக சித்தர்கள் கெட்டு போகாத இனிப்பு உணவுகளை வகைப்படுத்துவர். அவை தேன்,ஏலக்காய்,நாட்டு சர்க்கரை,பச்சை பற்பூரம்,நெய்.

பஞ்சாமிர்ம் இது சமசுகிருதம். தமிழில் ஐந்தமுது என்று பெயர்.

பஞ்ச+அமிர்தம் / ஐந்து+அமுது

நான் மேற்கூறிய ஐந்து பொருட்களும் அமுது.குண்டலினி சக்தியில் சுரக்கும் அமுதும் இப்பொருளில் உள்ள அமுதும் ஒன்றே என்று ஆசீவக சித்தர்கள் கண்டறிந்தனர்.இதன் வெளிபாடே பஞ்சாமிர்தம்.

உடலை காப்பது எப்படி

வாழைப்பழம் சிறிது நாளில் கெட்டு போகும்.ஆனால் மேற்சொன்ன பொருட்களில் வாழைப்பழத்தை போட்டு அதை பஞ்சாமிர்தமாக மாற்றிவிட்டால் அப்பழம் எப்பொழுதும் கெடாது. இப்பூத உடலுக்கும் இது பொருந்தும். அழிந்து போகும் இவ்வுடலை அழியாமல் பாதுகாப்பது அமுது என்றுணர்ந்த ஆசீவக சித்தர்கள் இதை வெளிபடுத்தினர். காலப்போக்கில் இந்த இச்சூட்சும இரகசியத்தை மறந்து ஐந்தமுதை தின்பண்டமாக மாற்றிவிட்டோம். இதை எனக்குணர்ததிய இறைவனுக்கு நன்றி.