You are currently viewing அந்தரத்தில் தொங்கும் தூண்

அந்தரத்தில் தொங்கும் தூண்

தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு தெரியாத பல கோவில்களில் பல சிறப்புகள் இருக்கிறது. அந்த மாதிரி ஒரு கோவிலைதான் இப்போது நாம் பாக்க போகிறோம். தருமபுரியில் கி.பி. 8 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூளம்பரகள் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில் இருக்கிறது.இதை கோட்டை கோவில் என்று அழைப்பர். இங்கே இருக்கக்கூடிய சிவன் சதுர ஆவுடையார் , அம்மனுக்கு தனி சன்னதி இருக்கிறது காமாட்சிஅம்மன் அப்படின்னு சொல்றாங்க. இந்த காமாட்சி அம்மன் சன்னதியை சுற்றி கீழ்புறம் 18 யானை சிற்பங்கள் மற்றும் ராமாயணத்தை குறிக்கக் கூடிய சிற்பங்கள் உள்ளது. சிவன் சன்னதியை விட அம்மன் சன்னதி உயரமாகவும் 18 படிகள் ஏறி தான் நாம் அம்மன் சன்னதி உள்ள போக முடியும். ஆறு பிரமாண்டமான தூண்கள் உள்ளது,இந்த ஒவ்வொரு  தூணிலும் ஈசனும் ஈஸ்வரியும் குறிக்கக்கூடிய சிற்பங்கள் இருக்கிறது. சிவன் சன்னதியில் உள்ளே இருக்கக்கூடிய மண்டபத்தின் தூண் அமைப்பை வைத்து பார்க்கும்போது அந்த மண்டபம் பிற்கால சோழர்களால் கட்டப்பட்ட மண்டபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.கருவறைக்கு முன் இருக்கக்கூடிய அந்த ஆறு தூண்கள் பல்லவர்கள் வழிவந்த நுளம்பரகள் காலத்தில் கட்டப்பட்டவை, இங்கு தான் அந்த அதிசயம் இருக்கிறது. புவியீர்ப்பு விசையை இங்க பொய்யாக்கி இருக்கிறார்கள் இங்கு இருக்கக்கூடிய ஆறு தூண்களில் ஒன்று மட்டும் அந்தரத்தில் தொங்குகிறது, கீழே ஒரு சென்டிமீட்டர் இடைவெளி இருக்கிறது, இந்த இடைவெளியில் ஒரு துணி அல்லது செய்தித்தாள் (Newspaper 🗞)உள்ள செல்லும்.தமிழ்நாட்டில் இந்த மாதிரி அந்தரத்தில் தொங்கும் தூண் எங்குமே கிடையாது. தர்மபுரியில் கோட்டை கோவிலில் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் இப்போது இந்த தூணின் இடைவெளியில் நிறைய பேர் காசுகளையும் அரிசியையும் உள்ள போட்டதால் இது பாதி அடைப்பட்டுவிட்டது. அதனால துணி அல்லது செய்தித்தாள் முழுமையாக தூணின்  மறுபக்கத்தில் வருவது இல்லை. பல புதிய அரிய தகவல்களை TAMILAR THADAM மூலமாக நீங்கள் தெரிந்துகொள்ளவீர்கள்.

 வாழ்க தமிழ் வளர்க தமிழ் ,நன்றி🙏💞…

This Post Has One Comment

Leave a Reply