தமிழின் முதல் நூல் எது?

தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் பற்றிய குறிப்பு

தொல்காப்பியத்தில் ஏறத்தாழ 1600 நூற்பாக்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்குப் பதினாறு இடங்கள் வீதம் தொல்காப்பியர் தம் காலத்தவரும் தமக்கு முற் பட்டவருமாக வாழ்ந்த இலக்கண இலக்கிய ஆசிரியர் பற்றிக் கூறியுள்ளார். 

“செவ்வி தென்ப சிறந்திசி னோரே” (உயிர் மயங்கியல், 96) குற்றியலுகரப் புணரியல், 78) 

“என்மனார் புலவர்” 

ளவென மொழிப உணர்ந்திசி னோரே” 

(வேற்றுமை மயங்கியல், 34) 

“தோன்றுமொழிப் புலவரது பிண்டம் என்ப” 

(செய்யுளியல், 165) 

“தோலென மொழிப தொன்னெறிப் புலவர்” 

(செய்யுளியல்,230) 

“புலனென மொழிப புலனுணர்ந் தோரே” 

(செய்யுளியல்,233) 

“நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” (மரபியல்,27) “நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்” 

(மரபியல்,98) 

இவ்வாறு தொல்காப்பியர் தம் நூலுள் ஏறத்தாழ இருநூறு இடங்களுக்குமேல் கூறியிருத்தலைக் காணலாம். 

இவற்றோடு, அவர் பன்னெடுங் காலமாக வழக்கில் இருந்துவந்த தமிழ் மரபினை நன்கு கவனித்தே நூல் செய்தார் என்பது அவர் எடுத்தாளும் பின்வரும் தொடர்களால் நன்கு தெரிகிறது: 

“தொல்லியல் மருங்கின் மரீஇய மரபே” (புள்ளி மயங்கியல்,60)

பண்டியல் மருங்கின் மரீஇய மரபே” (வேற்றுமை மயங்கியல், 7)

“தொன்னெறி மரபின் தோன்ற லாறே” 

“பாடலுட் பயின்றவை நாடுங் காலை” (அகத்திணையியல், 3)

“சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’ 

(அகத்திணையியல், 5) 

“பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை” (செய்யுளியல், 51) 

தொல்காப்பியர் காலத்திலும் அவர்க்கு முன்னும் தமிழ் நூல்கள் பல இருந்தன என்பதைப் பல நூற்பாக்களால் அறியலாம். முதல்நூல், தொகை நூல், விரிநூல், தொகை விரிநூல், விரிதொகைநூல் எனப் பலவகை நூல்கள் அவர் காலத்தில் இருந்தன.

இதன் உண்மை காலத்தை யாரும் அறியவில்லை காரணம் பல ஆயிரம் ஆண்டுகளாக இதன் பதிப்பு தொடர்வதால்…