உலகின் மிகப்பெரிய நாணயங்கள் எங்கே வழங்கப்படுகின்றன?
தென்கடலிலே கரோலைன் தீவுக்கூட்டத்திலுள்ள (Caroline Islands) யாப் (Yap) தீவில் வண்டிச் சக்கரங்கள் போன்று வட்டமான பெரிய கற்கள் நாணயங்களாக வழங்கப்படுகின்றன. சில நாணயங்களின் குறுக்களவு 12 அடி அளவில்.பெரிய நாணயங்கள் நிலங்களை விற்றல் வாங்குதல்போன்ற செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந் நாணயங்கள் வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும். இதனால் ஒருவனிடத்தில் எவ்வளவு செல்வமிருக்கிறதென்று மற்றவர்களறியக் கூடியதாக இருக்கும்.
Is it the largest currency in the world?
Stone money
On the island of Yap in the Caroline Islands in the South Seas, large round stones shaped like cart wheels are offered as coins. Some of the coins are 12 feet across. Larger coins are used to buy and sell land. These coins are kept outside the house. In this way, others will be able to know how much wealth a person has.