வெற்றிலை பயன்கள்

புற்று நோயை தடுக்கும் வெற்றிலை எப்படி சாப்பிடுவது.வெற்றிலை பயன்,வெற்றிலையின் சக்தி.

கருப்பு வெற்றிலை

புராண கதை

வெற்றிலை ஆகாயத்தில் இருந்து ஒரு பெண் இடுப்பில் மறைத்து வைத்து கீழ் உலகத்துற்கு கொண்டுவந்ததாக கூறுவர். சிறுவர்கள் வெற்றிலை போட்டால் மாடு முட்டும் என்பர்.

பெயர் காரணம்

வெற்றிலை – வெற்று + இலை ஆகாயத்தின் சக்தி உள்ளதால் இந்த பெயரை ஆசீவக சித்தர்கள் வைத்துள்ளனர். இந்த உண்மை புராண கதையில் மறைந்துள்ளது.

வெற்றிலை சாப்பிட்டால் என்ன நன்மை

நெஞ்சு சளியை கரைக்கும்,செரிமாணத்தை துரிதபடுத்தும்,எலும்பு வலுபெரும்,வாயு தொந்தரவு வராது,ஆயுட்காலத்தை அதிகரிக்கும்,புற்று நோய் வராமல் தடுக்கும்,கருப்பு வெற்றிலை காரம் அதிகம், வெள்ளை வெற்றிலை காரம் குறைவு.

வெற்றிலை எப்படி சாப்பிட வேண்டும். வள்ளலார் கூறியது

வெற்றிலையை தாம்புலம் என்று கூறுவர். பல் துலக்கு முன் வெற்றிலை பாக்கு போடக்கூடாது.வெற்றிலையின் நுனியையும் காம்பையும் கிள்ளி எறிய வேண்டும். முதுகு நரம்பை நகத்தால் எடுத்துவிட வேண்டும்.

காலையில் பாக்கு மிகுதியாகவும், மதியம் சுண்ணாம்பு மிகுதியாகவும், மாலையில் வெற்றிலை மிகுதியாகவும் வைத்து போட வேண்டும். வெற்றிலைப் பாக்குப் போட்டுக் கொண்டு மென்றவுடனே முதல் இரண்டு முறை ஊறும் நீரை விழுங்காமல்; உமிழ்ந்து விடவேண்டும்.

தாம்பூலம் தரிக்கத் தொடங்கும்போது முதலில் ஒரு வெற்றிலையை வாயில் போட்டுக் கொண்டு, பின்னரே பாக்கைப் போட வேண்டும்.

வெற்றிலையின் ஆங்கிலப் பெயர் betel,betel leaf.

கவுளி என்றால் என்ன?

100 வெற்றிலை கொண்ட கட்டு கவுளி என்றழைப்பர்.