மறைக்கப்படும் உண்மை,2லட்சம் ஆண்டு பழமையான குழந்தையின் மண்டையோடு,மனித இனம் தோன்றியது தமிழ்நாட்டில்.
விழுப்புரம் மாவட்டம் பொம்மயார்பாளையம் பகுதி தமிழக புதுவை எல்லையில் அமைந்திருக்கிறது. இங்கு 2001ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதியன்று மதியம் ஒரு மணிக்கு அகழாய்வு நடந்து கொண்டிருந்தது . கேரளப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியரான பி. ராஜேந்திரன் தலைமையில் நடந்து கொண்டிருந்த அகழாய்வில் தரைப் பகுதியிலேயே சில விலங்கு எலும்பு பதை படிவங்கள் கிடைத்தன. பிளீஸ்டோசீன் காலத்திய அந்தப் பொருள்கள், தரையிலிருந்து சுமார் 8 மீட்டர் ஆழத்தில் கிடைத்தன. 2.5 மீட்டர் ஆழத்தில் ஏற்கெனவே கற்காலக் கருவிகள் சில கிடைத்தன. 6 மீட்டர் ஆழத்தில் ஃபெர்ரிகிரீட் எனப்படும் இரும்பு ஆக்சைடு இறுக்கிய பாறைகள் தென்பட ஆரம்பித்தன.
திடீரென ஃபெர்ரிசெட் பாறைகளின் நடுவே புதை படிவம் ஒன்று தென்பட்டது. மண்டையோடு புதைபடிவமாக அது இருக்கலா மென்ற ஐயத்தில், சிறு பிரஷ் கொண்டு துடைத்துப் பார்த்ததில், பதை படிவத்தில் குழி ஒன்று தெரிந்தது. கண் குழிப்பகுதி அது என்று சந்தேகித்த ஆய்வாளர்கள், அதைச் சுற்றி இருந்த பாறையுடன் (ஃபெர்ரிகிரீட்டுடன்) வெட்டி எடுத்தனர். மண்டையோட்டின் அளவு கொண்டு அது சிறு குழந்தையின் மண்டையோடு என்று கணித்தார் ராஜேந்திரன். அதற்கு லேட்டரைட் குழந்தை என்றும் பெயரிட்டார். லேட்டரைட் குழந்தை கொல்லம் உபாசனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு 3-டி ஸ்கேன் செய்யப்பட்டது. அதன் பின் எண்டோகாஸ்ட் (ப்ளாஸ்டர் கொண்டு மண்டையோட்டின் உள்புற அச்செடுத்து மூளையை ஆய்வு செய்தல்) எடுக்கப்பட்டு, முற்றும் பாதுகாக்கப் பட்ட மூளை புதைபடிவ அச்சும் ஆராயப்பட்டது.
312 கன செமீ அளவு கொண்ட மூளை, 1-2 மிமீ தடிமன் கொண்ட மண்டையோட்டு எலும்பு, மேல் மற்றும் கீழ்த் தாடைகளின் 10 பால் பற்கள் என்று ஒரு முழுமையான மண்டையோடாக ஆய்வுக்குக் கிடைத்துவிட்டது ‘ஓடை குழந்தை’. பால் பற்களையும், மூளையின் அளவையும் கொண்டு இந்த குழந்தையின் வயது 5 மாதங்கள் மட்டுமே என்றும் நிறுவினர் ஆய்வாளர்கள். பெரும்பாலும் கரிமப் பொருள் எதுவும் லேட்டரைட் பாறைகளில் பாதுகாக்கப்படாது என்ற பொதுமையை உடைத்தது இந்த குழந்தையின் மண்டை ஓடு. பல் அமைப்பு ஆய்வுகளில் கீழ் மற்றும் மேல் தாடைகள் வெளிப்புறம் நீண்டிருந்தன என்பது தெளிவாகியது. ஐந்து மாதக் குழந்தைக்கு இவ்வாறு தாடைகள் நீண்டிருந்தது, குழந்தை நிச்சயம் ஹோமோ சேப்பியன்’ வகையறா இல்லை என்றும் அதற்கு முந்தைய ஹோமினிட் என்பதையும் நிறுவ உதவியது.
அடுத்ததாக சரியான வயதைக் கணிக்க பாபா அடாமிக் ரிசர்ச் சென்டரின் டாக்டர் எம்.பி. சௌகங்கர் வசம் மண்டையோட்டின் புதைப்படிவம் ஒப்படைக்கப்பட்டது. மண்டையோட்டை சுற்றியிருந்த ஃபெர்ரிகிரீட் பாறைப் பகுதியிலிருந்து சிறிது குவார்ட்ஸை வெட்டியெடுத்து அதை தெர்மோலூமினசன்ஸ் டேட்டிங் செய்தார். இதன் மூலம் ஃபெர்ரிகிரீட்டின் காலம் 0.166 மில்லியன் ஆண்டுகள் (அதாவது கிட்டத்தட்ட 2 லட்சம் ஆண்டுகள்) என்பது தெரிய வந்தது. ஆக பிளீஸ்டொசீன் காலத்தைச் சேர்ந்த மண்டையோடு இது என்பது நிரூபணமானது. இந்தக் காலத்தைக் கொண்டு ஹோமினிடான ஹோமோ எரக்டஸுக்கும் இன்றைய ஹோமோ சேப்பியனுக்கும் இடைப்பட்ட ஹோமோ சேப்பியன்ஸ் (ஆர்கயாக்) வகையைச் சார்ந்தது இந்த மண்டையோடு என்று தீர்மானித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
ஓடை குழந்தை மீது டி.என்.ஏ. மற்றும் இன்ன பிற ஆய்வுகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன! ஓடை பகுதியில் கிடைத்த ஒரே ஒரு மண்டையோடு புதைபடிவத்தைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள்இவை.இன்னும் அங்கு ஆய்வுகள் தொடரப்படவில்லை. 8 மீட்டர் ஆழத்துக்குக் கீழ் அந்தப் பாறைகளில் இன்னும் என்ன ஒளித்துவைத்திருக்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை.
சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பொது மூதாதையரிடம் இருந்து குரங்குகள் குடும்பமும் மனிதக் குடும்பமும் பிரிந்தன. 35 மில்லியன் ஆண்டுகளில் மேம்பட்ட ஆஸ்டிரலோபெதிகஸ் ஹோமினிட் தோன்றியது. இரு கால்களால் நடக்கக்கூடிய இந்த மனிதன் 1.10 மீட்டர் உயரமே இருந்தான், 40 கிலோ எடை மட்டுமே கொண்டிருந்தான்.
அதிலிருந்து மேம்பட்டவனாக 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவன் ஹோமினிட் ஹோமோ ஹாபிலிஸ் . முதல்ஆயுதங்களைச் செய்த இவன், பேசும் சக்தி பெற்றிருந்தான். 50 கிலோ எடை, 1.6 மீட்டர் உயரமும் கொண்டிருந்தான். இந்த மனிதனுக்கு அடுத்து பரிணாம வளர்ச்சியில் சுமார் 40-20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவன் ஹோமோ எரக்டஸ். குழு அமைத்து வேட்டையாடவும், நெருப்பு உண்டாக்கவும் தெரிந்தவன் இவன். ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் என்ற மனிதன் 1.5 லட்சம் முதல் 35000 ஆண்டுகள் வரை வாழ்ந்தவன், நீத்தார் புதைப்பு, சிறப்பு கருவிகள் செய்ய இவன் கற்றுக்கொண்டான்.
1.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மற்றொரு மனிதனே ஹோமோ சேப்பியன். இவன் பாறை ஓவியங்கள் வரையவும் கொம்பு மற்றும் எலும்புகள் கொண்டு ஆயுதங்கள் செய்யவும் கற்றிருந்தான். இந்த ஹோமோ சேப்பியன்களின் நேரடி வாரிசுகளாக பரிணாம வளர்ச்சியில் வேறு எந்த வேற்றுமையும் இல்லாமல் இருக்கிறோம் நாம். பாறை ஓவியங்கள்
Child’s skull found near Villupuram
Pommayarpalayam area of Villupuram district Tamil Nadu.It is situated on the border of Puduvai. Excavation was going on here on October 14, 2001 at one o’clock in the afternoon. Professor of History, University of Kerala B. In the ongoing excavation led by Rajendran, some animal bone trace forms were found in the ground area. The Pleistocene artifacts were found at a depth of about 8 meters from the ground. At a depth of 2.5 meters, it is already Neolithic Got some tools. At a depth of 6 meters, iron oxide tight rocks called ferricrete began to appear.
Suddenly, a figure appeared among the Ferrisset rocks. Suspecting that it might be a tattoo with a skull, after wiping it with a small brush, a hole was seen in the tattoo. Suspecting that it was an eye socket, the explorers cut it out along with the surrounding rock (ferricrete). Based on the size of the skull, Rajendran predicted that it was that of a small child. He also named it laterite baby. The laterite child was taken to Kollam Upasana Hospital and underwent a 3-D scan. An endocast was then taken (an impression of the inside of the skull with a plaster to examine the brain) and a completely preserved brain cast was also examined.
A complete skull with a brain size of 312 cubic cm, cranial bone 1-2 mm thick, 10 milk teeth of upper and lower jaws has been obtained for examination of the ‘river child’.
The researchers established that the age of this child was only 5 months based on the milk teeth and brain size. This child’s skull broke the general rule that almost no organic material is preserved in laterite rocks. Dentition examination showed that the mandibles and maxillae were elongated externally became clear. A five-month-old baby’s jaws are like this It was long, the baby was definitely a homo sapiens type
to establish that no and earlier hominid helped.
Next to predict the exact age Dr. M.P. of Baba Atomic Research Center. of the skull in the possession of Chaukangar
The cremation was handed over. skull
Some quartz from the surrounding ferrycrete bedrock Cut it out Thermoluminescence
Dated.
This shows that the age of ferrycrete is 0.166 million years (ie almost 2 lakh years). So it is proved that it belongs to the Pleistocene skull. Researchers have determined that the skull belongs to the Homo sapiens (archaic) species, dating to this period, between the hominid Homo erectus and the present-day Homo sapiens.
DNA on Odai baby And what other studies are still underway! These are the results of studies done with only one fossil skull found in the stream area. Studies have not been continued there. We don’t know what else is hidden in those rocks under 8 meters depth.
The ape family and the human family diverged from a common ancestor about 40 million years ago. The advanced Australopithecus hominid appeared in 35 million years. This bipedal man was 1.10 meters tall and 40
He weighed only kg.
The hominid Homo habilis emerged 25 million years ago as an advanced. He made the first weapons and had the power to speak. 50 kg
Weight and height of 1.6 meters. Next to this man in evolution was Homo erectus, who appeared about 40-20 million years ago. He knows how to hunt in groups and make fire. Homo Neanderthalensis lived between 1.5 million and 35,000 years ago, and learned to make special tools and burials.
Homo sapiens is another human that appeared 1.5 million years ago. He learned to draw rock paintings and make weapons out of horn and bone. We are the direct descendants of these Homo sapiens without any other evolutionary differences. Rock art sites in tamilnadu