வாணியம்பாடி புத்துக்கோவில்

சாலை விரிவாக்கத்திற்கு குறுக்கே நின்ற புத்து, பல முறை முயன்றும் இடிக்க முடியாத்து ஏன்,இடிக்க நினைத்தவர்களுக்கு மாரியம்மன் கொடுத்த தண்டனை,அதிர்ச்சி தரும் உண்மைகள்.

கேட்டதை தரும் புத்து மாரியம்மன்

வாணியம்பாடி புத்துமாரியம்மன் கோவிலின் மகிமைகள். வாணியம்பாடியை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள புத்துக்கோவில் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த புத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தினமும் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். மேலும் வெள்ளிக்கிழமை நாட்களிலும், அமாவாசை போன்ற விசேஷ நாட்களிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.இந்த கோவிலுக்கு வருபவர்களின் மனகவலை நீங்கி வாழ்வில் முன்னேற்றம் அடிகிறார்கள்,குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் நிச்சயம் உண்டு. வேண்டுதல் நிறைவேறியதும் இந்த பழமையான மரத்தில் தொட்டிலை கட்டியும்,பொங்கல் வைத்தும் ஆடு கோலிகளை பலியிட்டும் நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த புத்து கோவிலை2010ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக இடிக்க நினைத்தார்கள். ஆனால்நடந்த சம்பவம் வேறு.

1- ஆந்திராவை சேர்ந்த அதிகாரி புத்தை பார்வையிட்டு இடிக்க நாள் குறித்து சென்றவர்தான் திரும்பவே இல்லை என்கிறார்கள் ஊர் மக்கள்.

2-இறைநம்பிக்கை இல்லா ஒரு JCB ஆப்ரேட்டர் மூன்று முறை முயற்சி செய்து,வாகனம் பழுதாகி ஆளை விட்டால் போதும் வணங்கி வேறு சைட்டுக்கு சென்று விட்டார்.

3-குஜராத்தை சேர்ந்த தலமை அதிகாரி நேரில் ஆய்வு செய்ய வந்து இதை இடிக்க வேண்டாம் என்று சென்றுவிட்டாராம்.

4-கடப்பாறை கொண்டு புத்தை இடிக்க வந்த உள்ளூர்காரரை மக்கள் தடுத்தனர்.அன்று இரவே விபத்தில் அவர் கால் ஓடிந்து இன்றளவும் நடக்க முடியாமல் இருக்கிறாராம்.

5-புத்தின் ஆழத்தை அளக்க கோமராவை உள்ளே அனுப்பினார்கள் இங்குதான் புத்தின் மர்மமே ஆரம்பமாகிறது. புத்தின் அடியில் ஏகப்பட்ட பாம்புகள் இருக்கிறது அதில் மனித ஊருவம் எடுக்கும் சக்தி வாய்ந்த இச்சாதாரி நாகமும் உண்டு என்கிறார்கள்.

இந்த சம்பவங்களுக்கு பிறகு இந்த புத்துக்கோவிலின் மிகிமை சுற்று வட்டார ஊர்களில் பரவுகிறது கோவிலின் மகிகையை உணர்ந்து மக்கள் ஏராளமாக வரதொடங்குகறார்கள்.