You are currently viewing ரத்தனகிரி கோட்டை

ரத்தனகிரி கோட்டை

கிருஷ்ணகிரியில் இருக்கும் பாராமகால் கோட்டைகளில் இதுவும் ஒரு கோட்டை.இந்த கோட்டை பற்றி அதிகமாக யாருக்குமே தெரியாது இந்தக் கோட்டையைப் பற்றி வலைத்தளங்களில் தேடினால் கூட எந்த ஒரு தகவலும் இல்லை.அதனால நானும் என்னுடைய நண்பர் பர்கத் இரண்டு பேரும் இந்த கோட்டை போய் பார்க்க முடிவு செய்தோம். இந்த ரத்தினகிரி என்ற ஊர் அனுசோனை என்ற ஊரிலிருந்து சரியா ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோட்டையின் அடிவாரப் பகுதியில் ஒரு பழமையான ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை சமீபத்தில் புதுப்பித்துள்ளார்கள்.கோவில் பாத்துட்டு கோட்டை ஏற ஆரம்பித்தோம்.சிறிது தூரம் ஒற்றை அடி பாதை காட்டுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. நாங்க போகும்போது 30க்கும் மேற்பட்ட யானைகள் அந்த காட்டில் வந்து இருப்பதாக கூறினார்கள்.சிறிது தூரம் அந்த பாதையில் நடந்து போனதும் முதலில் நமக்கு தென்படுவது சிதைந்த நிலையில் இருக்கும் நுழைவாயில் நான்கு தூண்களுடன் உள்ளது.அதை கடந்த பிறகு மலையின் அடிவாரப் பகுதியில் மதில் சுவர்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் தென்படுகிறது. கருங்கல் தூண்களைக் கொண்டு கல்தூண் மண்டபம் ஒன்று அமைத்து இருக்கிறார்கள் சிதைந்த நிலையில் செங்கற்களும் நமக்கு கிடைக்கிறது.இயற்கையாக அமைந்த இருபெரும் பாறைகளின் கீழ் தான் நாம் செல்ல முடியும் இதற்கு உள்ளூர் மக்கள் ஆண்-பெண் குண்டு என்று அழைக்கிறார்கள்.இதிலிருந்து சிறிது தூரம் நடந்த பிறகு மலை ஏற்றம் ஆரம்பமாகிறது. நேர்த்தியாக படிக்கட்டுகளை சிறிது தூரத்திற்கு வெட்டி வைத்துள்ளார்கள்,அதற்கு மேல் படிக்கட்டுகள் இல்லை,எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் அந்த மலையின் மேல் நாம் ஏற வேண்டும்.மிகவும் ஆபத்தான பகுதி,இதை கடந்த பிறகு மலையின் உச்சியை அடைந்தோம். முதலில் நம் கண்களுக்கு தென்படுவது செங்கற்களை கொண்டு கட்டப்பட்ட ஒரு அறை இந்த அறை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளது.அதற்கு அருகில் மிக பிரமாண்டமான ஒரு அறை இருந்து அழிந்து விட்டது.இந்த அறையின் அகலம் மட்டுமே மூன்று அடிகளில் நான்கு வரியில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கீழ்ப்புறத்தில் ஒரு சிறிய குளம் ஒன்று உள்ளது.இந்த குளத்தை சுற்றி செங்கற்களை கொண்டு சுவர்கள் எழுப்பப்பட்டு உள்ளது.இதற்கு அருகாமையில் இரண்டு சிறிய பாறைகளில. வைணவத்தை குறிக்கும் விதமாக மூன்று சிற்பங்கள் உள்ளது.அவை கருடன்,பாம்பின் மேல் நடனமாடும் கண்ணன் எதிர் பாறையில் ஆஞ்சநேயர் புடைப்பு சிற்பமாக உள்ளது.இங்கு இருக்கும் அனைத்து அறைகளும் கருங்கல் தூணைக் கொண்டு வெளிப்புறத்தில் செங்கற்களை கொண்டு கட்டி உள்ளார்கள்.ஒரே ஒரு அறையில் மட்டும் கருங்கல் துணைகொண்டு நுழைவாயில் அமைத்துள்ளார்கள் இந்த நுழைவு வாயிலின் மேற்பகுதியில் சிவலிங்கத்திற்கு பசுமாடு பால் கொடுப்பது போன்ற ஒரு புடைப்புச் சிற்பம் உள்ளது.இந்த மண்டபத்தின் உள் புதையல் புதையலைத் தேடி ஒரு சிலர் குழியைத் தோண்டி உள்ளனர்.மண்டபம் முழுவதுமே சிதிலம் அடைந்துள்ளது.இயற்கையாக அமைந்த மிகப் பெரிய சுனை சுற்றி செங்கற்களை கொண்டு சிவர்கள் அமைத்து இரண்டாவது குளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த குளத்தின் கிழக்கு பக்கத்தில் ஒரு 12 தூண்களைக் கொண்ட சிறிய மண்டபம் ஒன்று உள்ளது இந்த மண்டபத்தில் இருந்து படிக்கட்டுகள் கீழுள்ள குலத்திற்கு செல்கிறது இந்த படிக்கட்டுகள் அனைத்துமே வழுக்கும் அதனால் பார்த்து செல்லுங்கள்.இந்தக் கோட்டையில் நாங்கள் பார்த்த வரை நான்கு வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த செங்கற்கள் கிடைத்தது.இது 1000-த்திலிருந்து 600 ஆண்டுகள் வரை பழமை.இந்தக் கோட்டையை கட்டியது யார்? இந்த ரத்தனகிரியில் இருந்து சரியாக ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அனுசோனை என்ற ஊரில் கல்வெட்டுடன் ஒரு புலிகுத்திப்பட்டான் நடுகல் உள்ளது.இதில் முதலாம் ராஜேந்திர சோழனின் பெயர் உள்ளது.இந்த நடுகல்லில் உள்ள இவரின் பெயரைக் கொண்டும் செங்கல்லின் அளவை கொண்டும் இவருடைய ஆட்சி ஆண்டு கணக்கிட்டும் இந்த கோட்டையை முதலாம் ராஜேந்திர சோழன் தான் கட்டினார் என்பது என்னுடைய உறுதியான கருத்து.நீங்கள் இந்த கோட்டைக்கு செல்வதாக இருந்தால் தனியாக செல்லவேண்டாம் குழுவாகச் செல்வது சிறந்தது.

வாழ்க தமிழ் வளர்க தமிழ் நன்றி Full video —–> https://youtu.be/h7xsgyIAbqk

🙏
😇

Leave a Reply