தமிழ்நாட்டின் மாநில மலர்
சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் அழகிய பூ காந்தள் பூவாகும். இந்த பூ தமிழ்க் கடவுள் முருகனுக்குரிய பூவாகும். மழைக் காலங்களில் வேலி ஓரங்களில் பூத்துக் குலுங்கும் இக்காந்தளைச் கிராம்புறங்களிலும் வயற்புறங்களிலும் வாழும் மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் ‘காந்தள்‘ என்ற பெயர் பழந்தமிழர் இட்ட பெயரா என்பது தெரியாது. இதற்குப் பல பெயர்கள் நம் தமிழ்நாட்டில் உண்டு. கார்த்திகைப் பூ, கலப்பைக் கிழங்கு, காக்கைமூக்குச் செடி என்று வழங்குகின்றனர். கார்த்திகைக் காலத்தில் பெரும்பாலும் இப்பூ பூப்பதால் இதைக் கார்த்திகைப்பூ என்று கூறுவர். பிற காலங்களில் வேலியில் கொடியாகப் படர்ந்திருப்பதை எளிதாகப் பார்கக முடியும். இதன் கிழங்கு கலப்பையைப் போலிருப்பதால் கலப்பைக் கிழங்கு என்று கூறுவர். கோயம்புத்தூர்ப் பகுதிகளில் இதைக் ‘காக்கைமூக்குக் கொடி என்று அழைப்பர். இதன் காய் நீண்டு காக்கை மூக்குப் போல் சிறிது வளைந்து இருப்பதால் இப்பெயர் பெற்றது.
சங்க நூல்களில் இதன் பூ பலவாறாக உவமிக்கப்படுகின்றது. முதிரும் பருவத்தில் பூ நன்றாகச் சிவந்து காணப்படுவதால் குருதியின் நிறத்தோடு ஒப்பிடப்படுகின்றது.
“காந்தள் முகை புரைவிரல்” புறம். 144
“குருதிப் பூவின் குலைக்காந் தட்டே” (குறுந்தொகை, 1)
“காந்தட் குருதி யொண்பூ” (நற்றிணை,34)
“குருதியொப்பின் கமழ்பூங் காந்தள்” (நற்றிணை,399)
“தோடார் தோன்றி குருதி பூப்ப” (முல்லைப்பாட்டு,96)
“குருதி மலர்த் தோன்றி” (கைந்நிலை26)
இதன் பூவிதழ்கள் நன்றாக நீண்ட காம்புடன் முழுவதும் சிவந்து இருக்கும். Tamilar Thadam
Lord Muruga’s favorite flower
The beautiful flowerkanthal is the most revered in Tamil literature. This flower is considered as the flower of Tamil god Murugan. People living in small villages and rural areas know well that this kanthal blooms along the fences during the rainy season. But it is not known whether the name ‘Kanthal’ is the name given to it by Palandamizhar. It has many names in Tamil Nadu. All are causal names. Presently they offer Karthikai flower, Plow tuber and Crow’s nose plant. It is given as Karth Thikaipoo as it blooms mostly during Karthika season. At other times the vines on the fence are not easily discernible. But it looks bright when it blooms. Its tuber resembles a plow so it is named as plow tuber. In remote areas of Coimbatore it is called ‘Crow’s Nose Flag’. It got its name because its stem is elongated and slightly curved like a crow’s nose cup.
Its flower is described in many ways in Sangha texts. As the flower matures, it looks bright red and has been compared to the color of blood.
Its petals are bright red. With a long tail