அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் தமிழர் தடம் குமரன். இந்த வலைப்பதிவில் நாம் முரசு நாடு பற்றி பார்க்க போகிறோம். முரசு நாடா?.. இதைக் கேட்ட பொழுது நானும் உங்களைப் போல் தான் அதிர்ச்சியானேன். முரசு நாடு இன்றைய ஓசூரின் ஆயிரம் ஆண்டுகள் பழைய பெயர்.
இங்கு நாம் மலை ஏற போகிறோம். அப்படி இந்த மலையில் என்ன இருக்கிறது என்பதை இந்த முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து கிலமங்கலம் சாலையில் ஊடே துர்கம் அபப்டிகிற ஊருல தான் இந்த மலை இருக்கிறது.
இந்த மலை ஏறுவதற்கு சரியான பாதை அமைப்பு இல்லை. நான் மலை ஏற ஆரம்பிக்கும் போதே யானையின் சாணம் இருந்தது. ஒரு யானையின் சாணம் ஒரு காட்டையை உருவாக்கும் என்று சொல்வார்கள். சரி வாங்க தொடர்து மலை ஏறுவதைப் பற்றி சொல்கிறேன்.இந்த மலை செங்குத்தாக இருக்கிறது . இங்கு வருகிற பொழுது நிறைய பாதுகாப்புடன் தான் வரவேண்டும்.
பாதி மலையில் இரண்டு பெரிய பாறையில் ஆஞ்சுநேயாயர் வரைந்து வைத்திருக்கிறார்கள். இதை தொடர்ந்து எற ஆரம்பித்தாள் மலை உச்சி செல்வதற்கான பாதை கற்களை கொண்டு அமைந்திருக்கிறது. நாங்கள் ஏறிக்கொண்டு இருக்கும் போது எங்களுக்கு ஒரு அதிர்ச்சி அது என்னவென்றால் யானையின் சாணம் மனிதர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியுமா. சரினு பாதையை தொடர்ந்து மேலே ஏறினோம். போகிற வழியில் ஒரு குட்டை இருந்தது.
இந்த குட்டையை யானைகள் பயன்படுத்தி இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. இந்த குட்டைகளுக்கு அருகே எனக்கு கட்டிடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்தது .
இங்கு கிடைத்த செங்கல் ராயக்கோட்டை மட்டும் இரத்ணகிரிகோட்டை இல் கிடைத்த செங்களுடன் ஒத்து காணப்படுகிறது. இதை எல்லாம் பாத்த பிறகு மீண்டும் மலை எற ஆரம்பித்தோம். வழியில் ஒரு மிக பெரிய குளம் வெட்டப்பட்டு இருந்தது.
அது மட்டும் இல்லாமல் குளத்தை பாதுகாக்க அதை சுற்றி கருங்கற்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கே இருந்து சற்று மேலே ஏறினாள் மலை உச்சியை அடையலாம் . மலை உச்சியில் நமக்கு இரண்டு கோவில்கள் தெரிந்தது.
அதில் ஒன்னு ஆஞ்சுநேயாயர் உடைய புடைப்பு சிற்பம் இருக்கிறது. இந்த கோவிலுக்கு நேர் எதிரே சிவன் கோவில் இருக்கிறது . இந்த சிவன் கோவிலின் மூலவர் பெயர் ஶ்ரீ பால குமார சிவகிரி நாதர் அப்படினு சொல்கிறார்கள். இந்த கோவில் செங்கல் கட்டிடம், இந்த கோவிலை பாத்ததும் எனக்கு சிவாடி கோவில் தான் ஞாபகம் வருகிறது.
சிவ லிங்க அமைப்பு
சதுர ஆவுடையார் அமைப்பில் காட்சியளிக்கிறார். இந்த சிவலிங்கத்தின் அமைப்பும் இந்த கட்டிடத்தின் அமைப்பும் இங்கு கிடைத்த செங்கல் வைத்துப்பார்த்தால் இந்த கோவில் 800ஆண்டு பழமையானதாக இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. இங்கு வந்து சிவனைப் பார்த்து தரிசித்தது நேர்மறை எண்ணத்தையும் தருகிறது. நீங்களும் ஒருமுறை இந்த சிவனை தரிசியுங்கள்.
பல புதிய தகவல்களை அறிய தமிழர் தடம் சேனலை பாருங்கள். இதே போன்ற அடுத்த வலைப் பதிவில் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி