738 ஆண்டுகளுக்கு மின் கட்டப்பட்ட அணைகட்டு.தமிழனின் அசாத்திய திறமை, முதல் நதிநீர் இணைப்பு இதுதான். இந்த அணைக்கட்டு பக்கத்தில் ஒரு மணிமண்டபம் இருக்கு அவர் பெயர் காலிங்கராயன்.
யார் இந்த காலிங்கராயர்?
1235 ஆம் ஆண்டு கனகபுரம் என்ற ஊரில் பிறக்கிறார்.இவருடைய இயற்பெயர் லிங்கயன். இவருடைய இருபதாவது வயதில் இந்த ஊரை பாண்டியர்கள் ஆட்சி செய்கிறார்கள்.சடையவர்மன் வீரபாண்டியன் என்ற அரசர் துணை அரசனாக ஆட்சி செய்கிறார். பாண்டியர்களுடைய போர் படையில் சேர்ந்து பல போரில் இவருடைய திறமையை வெளிப்படுத்தினார் இதைப் பார்த்த பாண்டிய மன்னன் இவருக்கு காலிங்கராயன் என்ற பட்டத்தை கொடுக்கிறார், அதுமட்டுமில்லாம போரில் மன்னனுக்கு ஆலோசனை கூறும் வேத அமைச்சர் என்ற உயர்ந்த பதவியும் கொடுக்கிறார்கள்.
இந்த காலகட்டங்களில் அவருடைய பிறந்த ஊர்ல கொடூரமான வறட்சி நிலவுகிறது இதனால் மிகுந்த வேதனை அடைகிறார் அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று வரட்சி இன்னொன்னு இவருடைய ஊருக்கு பக்கத்திலே தான் ஆண்டு முழுவதும் வற்றாத உயிர் நதி காவிரி ஓடுகிறது. ஆனால் காவிரியிலிருந்து இவரால நீரை இவருடைய ஊருக்கு கொண்டு வர முடியவில்லை. காவிரி ஓடுவது பள்ளமான பகுதியில் இவருடைய ஊர் இருக்கிறது கொஞ்சம் மேடான பகுதியில். அப்பொழுது துணை நதியின் ஞாபகம் வருகிறது, துணை ஆறுகளில் ஒன்று பவானி. பவானியில் இருந்து நம்ம ஊருக்கு கால்வாய் வெட்ட அவர் நினைக்கிறார். இவர் பாண்டிய மன்னனுடைய உதவியுடன் ஒரு கால்வாய் வெட்டுகிறார்.
பொதுவாக அணை இருபுறமும் சுவர்கள் கட்டி நடுவில் தண்ணீர் தேக்கி வைப்பார்கள், இந்த அணை சற்று வேறுபட்டது நடுவில் பள்ளங்கள் வெட்டப்பட்ட அடியில் கருங்கற்களை அடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த கருகற்களை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது இந்த அணையின் அருகில் ஊராட்சி மலை என்று ஒன்று உள்ளது அங்கிருந்து கற்களை வெட்டி எடுத்து வந்து இந்த அணையை கட்டி உள்ளனர்.
பவானி ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டி நொய்யலாறு வரை கொண்டு சென்றுள்ளனர். இந்த அணையையும் கால்வாயும் கட்டி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆனது 1270 இருந்து 1282 வரை தேவைப்பட்டது இதை முழுமையாக கட்டி முடிக்க. இந்தக் கால்வாயின் மொத்த நீளம் 90 கிலோமீட்டர் இந்த கால்வாய் முகால் வாய் முழுவதும் ஒரே நேர்கோட்டில் அமையாமல் வளைந்து வளைந்து செல்லும் பவானி முதல் நொய்யல் வரை பள்ளமான பகுதி அதனால் நீரோட்டம் வேகமாக இருக்கும் நீரோட்டம் வேகமாக இருந்தால் விவசாயம் திறன்பட செய்ய முடியாது என்பதால் இக்கால்வாய் வளைந்து வளைந்து அமைக்கப்பட்டுள்ளது நீரோட்டம் சற்று தாமதமாக செல்வதற்காக.
முதல் நதிநீர் இணைப்பு கால்வாய் இதுவே 15743 ஏக்கர் விவசாய நிலம் இந்த கால்வாய் மூலம் பாசனம் பெறுகிறது சுமார் 6371 எக்டர். 90 கிலோமீட்டர் முடிவில் இந்த கால்வாய் நொய்யல் ஆற்றில் கலந்து நொய்யல் ஆறு காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றின் கரையோரத்தில் ஒரு கல் காணப்பட்டது இது சாதாரண மாநகரில் அல்ல ஆலயங்களில காணப்படுவது போல் சிற்பங்கள் செதுக்கப்பட்ட ஒரு கல் ஒருவேளை இங்கு ஆலயம் இருந்திருக்கும் வாய்ப்பு உண்டு.
நன்றி