பொற்பணைகொட்டை

தமிழர்களின் வரலாற்றை தேடி, இது தமிழர் தடதின் பயணம், வணக்கம் நான் குமரன்

இந்த வலைப்பதிவில் நாம் தமிழ் நாட்டில் முதலில் கட்டப்பட்ட கோட்டையை பக்க பொறோம்

இப்ப புதுக்கோட்டையில் இருந்து 8 கி.மீ வெப்பங்குடி ஊராட்சி உற்ப்பட பொற்பணைகொட்டையை இந்த வலைபதில் காண்போம்

குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயா 2005 இல் இங்கு மேற்பரப்பு ஆய்வில் இங்கு சில வரலாற்று எச்சங்கள் கிடைத்துள்ளது.அதன் பின் ராஜவேலு பேராசிரியர் 2013இல் களாய்வில் நடுகல் கண்டறியப்படுகிறது.

நடுகல்

இது கி.பி 2ஆம் நூற்றாண்டு எனவும், இதில் தமிழி எழுத்துக்கள் உள்ளன எனவும் குறிப்பு உள்ளது.இந்தத் தமிழி கல்வெட்டில் ‘ஆடு, மாடு பிடிக்க வந்தவர்களை எதிர்த்துப் போராடி இறந்த போர் வீரர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. 

நானும் என் குழுவும் இந்த இடத்தில் களாய்வு மேற்கொண்டோம், இங்கு எங்களுக்கும் இரும்பு அலை,முதுமக்கள் தாழி,கருப்பு சிவப்பு நிற பானை ஓடு போன்ற எச்சங்கள் கிடைத்தது.

கோட்டை அமைப்பு

1.6 கி.மீ சுற்றளவு கொண்ட வட்ட வடிவ கோட்டை. மேலும் இது 50எக்கர் நிலப்பரப்பு கொண்டது.இந்த கோட்டை புற கோட்டை மறறும் அக கோட்டை அப்படினு இரண்ட பிரிக்கப்பட்டுள்ளது.இந்த கோட்டையை சுற்றி அகழி இருந்துள்ளது. இன்னமும் இந்த கோட்டையின் சுவர்கள் காணப்படுகிறது. இந்த கோட்டை சுவரின் உயரம் 40அடி. இந்த கோட்டையை செம்புரன் கல் கொண்டு கட்டப்பட்டது. இந்த கல் பயன்படுத்தி இந்த ஒரு கோட்டை மட்டும் கட்டப்பட்டுள்ளது.

சங்க இலக்கியத்தில் பெரும்பாணாற்றுப்படையிலும், அகநானூறுலிலும் செங்கல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த செங்கல் குறைந்தது 30-40செ.மீ இருந்திருக்கும்.

இரும்பு உருக்கும் ஆலயம்

சுடுமண் வார்ப்புக் குழாய்கள், உருக்குக் கலன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அக்காலத்தில் இரும்பை உருக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

பல புதிய தகவல அறிய தமிழர் தடம் சேனல் ஆ பாருங்க. இதே மாறி அடுத்த வலைப்பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

நன்றி