மலையில், பழனிப்பெருமான் கருவறையின் தெற்கு வடக்குச் சுவர்களிலும், வியாழவரிசைகளிலும் மூன்று பக்கங்களிலும் எட்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவை 13ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கோனேரின்மை கொண்டான் வீரபாண்டிய தேவன், 15 ஆம் நூற்றாண்டின் மைசூர், வீரநஞ்சைய உடையார், விஜயநகரத்து கிருஷ்ண தேவராயர் ஆகியோரதும் சில சமீபகாலத் தவையுமாகும். மேற்குறித்த அரசர்கள் ஆண்டவருக்குரிய அன்றாட வழிபாட்டிற்குரிய பொருள்களுக்காக நன்செய், புன்செய், முதலிய நிலங்களும், திருநந்தா விளக்கு, திருவமுது, திருமஞ்சனம் பூமாலை முதலியவைகளுக்காக நிபந்தனைகளும் ஏற்படுத்தியமை அக்கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. Tamilar thadam
பழனிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கர்ப்பக்கிருஹத்தின் வெளிப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு வாசகங்களின் சுருக்கம்
கல்வெட்டு எண் 1
கி.பி.1300-ல் பாண் டிய அரசன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்பவன் பழனி சுப்பிரமணிய சுவாமிக்குத் தன் பெயரால் ஒரு விசேஷ சந்தி பூஜை செய்ய ஏற்பாடு செய்தான். அதற்கு ‘அவணிவேந்த ராமன் சந்தி’ என்று பெயர். இந்தப் பூஜைக்கு வேண்டிய அமுதுபடி சாத்துப்படிகளுக்காக ஒரு ஊரையே தானமாகக் கொடுத்தான். இந்த ஊருக்கு ‘அவணி வேந்த இராமநல்லூர்’ என்று பெயர். இந்த ஊர் வைகாவூர் பெருமலைக்கு வடக்கிலும், கொண்டை ஆற்றுக்கும், அணைக்கு மேற்கிலும் இருந்தது. பிற எல்லைகளும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. இதைக் கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டு இறுதியில் முற்றிலுமாக எழுதப்படாமல் நின்று விட்டது. அக்காலத்தில் பழனிமலை வைகாவூர் நாட்டைச் சார்ந்ததாக இருந்தது. வைகாவூர் நாடு என்பது நாட்டுப்புறத்தைக் குறிக்கும். இந்தக் கல்வெட்டு என்பதால் அரசனே இந்த
“கோனேரின்மை கொண்டான்
ஆணையைக் கொடுத்ததைக் குறிக்கிறது.
கல்வெட்டு எண்-2
கி.பி.1316ல் ஆண்ட ஜடாவர்மன் வீரபாண்டியன் என்பவன் பழனி மலை சுப்பிரமணிய பிள்ளையார் கோயிலுக்கு 22 வேலி, ஒரு மாநிலம் தானமாகக் கொடுத்திருக்கிறான். இந்த நிலத்து வருவாயைக் கொண்டு அமுதுபடி, சாத்துப்படி முதலிய செலவுகள் செய்து கொள்ளக் கொடுக்கப்பட்டது. இந்த நிலத்திற்கு இடும்பன் குளம் என்றும் குன்றன்வயல் என்றும், வீரசோழ மண்ணரை என்றும் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலம் இடும்பன் குளத்திற்கு மேற்கும், ஊர் வாய்க்காலுக்கு வடக்கும், சுப்பிரமணிய சுவாமி திருமஞ்சனக் குளத்திற்குக் கிழக்கும், பேச்சி மலைக்குத் தெற்கும் உள்பட்டு இருந்தது. இந்த நிலத்தில் இருந்து வரும் வருவாய் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டது. இந்தத் தானத்தைக் கோயில் கல் சுவரிலும், ஒரு செப்புப் பட்டயத்திலும் எழுதிக் கொள்ள ஆணையிடப்பட்டது. இந்தக் கோயில் வழிபாடு செய்பவர்களும் மண்டப முதலிகளும் காக்க வேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.
கல்வெட்டு எண் – 3
கி.பி.1316ல் ஆண்ட ஜடாவர்மன் வீரபாண்டியன் பழனி மலை சுப்பிரமணிய பிள்ளையார் கோயிலுக்கு ஒரு நிலம் தானமாகக் கொடுத்தான். கொடுக்கப்பட்ட நிலம் பழனி ஊர் வாய்க்காலுக்கு மேற்கு, வாணன் ஆற்றுக்கு வடக்கும், பிரும்ம குளத்திற்குப் போகிற வழிக்குக் கிழக்கும், பழனி ஊர் வாய்க்காலுக்கு தெற்கும் இடைப்பட்டிருந்தன. இந்த எல்லைக்குள்ளாக லஷ்மிநாராயணப் பெருமாள் நிலமும், ஏற்கனவே சுப்பிரமணிய சுவாமிக்குக் கொடுத்த விளை நிலமும், இருந்தன. அவை போக மீதி நிலம் இப்போது தானமாகக் கொடுக்கப்பட்டது. இந்த நிலத்து வருவாய்களாகப் பொன், நெல் முதலியவைகள் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. இவற்றில் இருந்து திருப்பணி, அமுதுபடி சாத்துப்படி முதலிய நடத்திக் கொள்ள ஆணையிடப்பட்டது. இந்த ஆணையில் ஆளுந்தூர் உடையான் கையெழுத்திட்டுள்ளனர். காணிங்கராயன் என்ற இருவர் கையெழுத்திட்டனர்
கல்வெட்டு எண் – 4
1318ல் ஜடாவர்மன் வீரபாண்டியன் என்பவன் காலத்தில் சுந்தரபாண்டியநல்லூரைச் சேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு நிலம்
கொடுத்திருக்கிறார்கள் .அதை இக்கோயில்
பண்டாரத்தார்கள் (பொக்கிஷதாரர்கள்) பெற்றுக் கொண்டனர். சுந்தரபாண்டியநல்லூர் காடு, புன்செய், குடியிருப்பு, குளம், மரம், கிணறு முதலிய அனைத்தும் தானமாகக் கொடுக்கப்பட்டன. இந்தக் கல்வெட்டுச் சாசனத்திற்குத் திருநட்டப்பெருமாள், நையாதேவர், முடிகொண்ட பல்லவராயன், சண்டராதி, ரிஷபதேவன், சோழநாட்டு ஆள்வான், முடிகொண்ட சோழ பட்டன், சேமன், தில்லை சிங்கதேவர், நாராயண தேவன், பிள்ளை நாடாழ்வான், பல்லவரையன் முதலிய ஊர் பிரதிநிதிகள் கையொப்பம் இட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்ல இந்தப் பத்திரத்தை ஆறுமுக பிச்சன் என்பவன் எழுதினான்.
கல்வெட்டு எண் – 5
விஜயநகர மாமன்னர் மல்லிகார்ஜூனன் என்பவன் ஆண்ட காலத்தில் 18.10.1471 இல் (விளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 5-ஆம் தேதி, சுக்லபட்சம், பஞ்சமி, வெள்ளிக்கிழமை, சூரிய கிரஹணத்தன்று) சகல லோகத்திற்கும் தம்பிரானார் நைனார். இளைய தனை நைனார் (பழனி சுப்பிரமணிய சுவாமி இவ்வாறு அவ்வூர் கல்வெட்டில் கூறப்படுகிறது). மூன்று சந்நிதிகளில் பூஜையும், மகாபூஜையும் நடக்கவும், திருஅமுது, திருநந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் முதலியவைகளுக்காகவும், வைகாவூர் நாட்டு ‘இரவிமங்கலம்’ என்ற ஊர் தானமாகக் கொடுக்கப்பட்டது. இந்த இரவிமங்கலம் கொழுமம் போகும் பெருவழிக்குத் தெற்கிலும், பன்றி மலை வழிக்கு மேற்கும், பன்றி மலைக்கு வடக்கும், ஆற்றுக்கு கிழக்கிலும் இடைப்பட்டிருந்தது. அவற்றைச் சேர்ந்த நன்செய், புன்செய் அனைத்தும் மானியமாகக் கொடுக்கப்பட்டது. அவைகளைப் பழனி சுப்பிரமணியசுவாமி கோயில் ஸ்தானீகர்கள் காத்துக் கொடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கல்வெட்டு கூறியது. இந்தப் பத்திரத்தில் வைராகராயர், சேரமான் தேவர், மங்களராயர், திருநட்டப் பெருமாள், ரிஷபதேவன் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.
கல்வெட்டு எண் 6
வீரநஞ்சண்ண உடையார் காலத்தில் (ருத்ரோத்காரி வருஷம், தை மாதம் 22-ஆம் தேதி அபரபட்சம், வெள்ளிக்கிழமை, ரேவதி நட்சத்திரம், பஞ்சமி திதியன்று) சுப்பிரமணிய சுவாமிக்கு (நாயனார் இளையநாயனாருக்கு) வைகாவூர் நாட்டு கலயன்புத்தூர் சபையைச் சார்ந்த பெரிய பெருமாள் நம்பி திருஆழ்வார் தானம் கொடுத்தார். கல்வெட்டு முற்றிலும் எழுதப்படவில்லை.
கல்வெட்டு எண் 7
விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவ மகாராயன் காலத்தில் 13.11.1520 (விக்கிரம வருஷம் சித்திரை மாதம் 10ஆம் தேதி சுக்ல பட்சம், நவமி திதி, ரேவதி நட்சத்திரத்தன்று) கிருஷ்ண தேவராயரின் மந்திரி கொண்டயநரசய்யரின் அதிகாரி கொண்டய தேவமகாராஜா என்பவர் பழனி மலை வேலாயுதப் பெருமாளின் (சுப்பிரமணிய சுவாமிக்கு) நிலம் தானமாகக் கொடுத்ததைக் கல்வெட் கூறுகிறது. கல்வெட்டு முற்றிலும் எழுதப்படவில்லை.