நரம்புக் கருவிகள்
நரம்புக் கருவிகளாகும். யாழ், வீணை, தம்புரா, கோட்டுவாத்தியம் போன்ற வாத்தியங்கள் நரம்புக் கருவிகள். இவை மரத்தில் செய்யப்பட்ட நரம்புகள் அல்லது கம்பிகளை கொண்டு பூட்டப்பட்டவை.
இவற்றுள் யாழ் என்பது மிகவும் பழமையான இசைக் கருவியாகும். இயற்கையோடு ஒத்து வாழ்ந்த பண்டைத் தமிழர்கள், இயற்கையில் காணும் பொருள்களின் அசைவினாலும், அவை ஒன்றோடொன்று கொள்வதாலும், உண்டாகும் அதிர்ச்சியினாலும் ஏற்படும் பலவித ஒலிகளைத் தங்களது நுண்ணிய செவியால் உணர்ந்து அனுபவித்தனர். வேட்டுவர் தம்முடைய தொழிலைச் செய்யுங்கால், இறுகக் கட்டிய வில் நாணினின்று எழும் இன்னொலிகளைக் கேட்டு இன்புற்று, இவ்வில்லும் ஓர் இசைக் கருவியாகப் பயன்படும் என்று நாளடைவில் உணரலாயினர். அங்ஙனமிருக்க, கானகத்தில் என்று பசுத்திரளை மேய்க்கச் சென்ற இடையன் தான் செய்து கொண்ட குழலில் பாலைப் பண்வாசித்து அலுத்திருக் கையில், வேடன் வில்லின்மீது கவனம் செலுத்தினான்.
அவன் உடனே குமிழ் மரத்தின் உள் துளையுடைய கொம்பு ஒன்றை வெட்டி வளைத்து, அதன் இரு நுனியிலும் துளையிட்டு, அத்துளையின் வழியாக மரல் என்னும் மரத்தின் ரு நாரை உரித்துத் திரித்துக் கொண்டே கயிற்றை நாணாகக் கட்டித் தானும் ஒரு வில் செய்து கொண்டு, அதன் நாணை விரலால் தெரித்துக் குறிஞ்சிப் பண்ணை வாசிக்கத் தொடங்கினான். அதிலிருந்து ‘வில்யாழ். என்ற யாழ் தோன்றியது. இவ் வில்யாழ் பற்றிய வரலாறு பெரும் பாணாற்றுப் படையில் (175, 184) கூறப்பட்டுள்ளது.
வில்யாழுக்குப் பின் தோன்றிய பேரியாழ் மூன்று ஸ்தாயிகளிலும் ஏழு சுரங்களை ஒலிக்கக் கூடிய 21 நரம்புகள் (தந்திகள்) கொண்டது. இந்த யாழ் கையில் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைந்திருந்தது.
நரம்புகளிலிருந்து எழும் ஒலியைப் பெருக்குவதற்காக இக் கருவியில் அமைந்த குழி ‘பத்தர்‘ என்றும், இப்பத்தரோடு இயைந்து மேலாக வளைந்து நரம்புகளைத் தாங்கி நிற்கும் தண்டு ‘கோடு‘ என்றும், நரம்புகளை முறுக்குவதற்கும் தளர்த்துவதற்கும் அத்தண்டிலேயே பொருந்தியுள்ள நரம்புக்கட்டுகள் திவவுகள்’ என்றும் பெயர் பெற்றிருந்தன.
பேரியாழுக்குப் பின் தோன்றிய சீறியாழ் அல்லது செங்கோட்டியாழ் ஏழு தந்திகளைக் கொண்டது. இதற்கு ஒன்பது தந்திகள் உண்டு என்று கூறுவாருமுளர், வில்யாழும் பேரியாழும், சீறியாழும் சங்கத் தமிழ் நூல்களில் கூறப் பட்டுள்ளன. Tamilar Thadam