You are currently viewing தென்கரை கோட்டை

தென்கரை கோட்டை

40 ஏக்கரில் ஒரு தரை கோட்டை தமிழகத்திலேயே இதுதான் பெரிய
கோட்டை அப்படின்னு சொல்றாங்க,இந்த கோட்டை தருமபுரி
மாவட்டத்தில் தென்கரை கோட்டை என்ற ஊரில் அமைந்திருக்கிறது.
ஆரம்ப காலங்களில் இந்தக் கோட்டையின் உள்ளதான் ஊர்மக்கள்
வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.இப்போது இந்த கோட்டை சிதிலமடைந்த
நிலையில் இருக்கிறது. இந்தக் கோட்டையை கட்டியவர் யார் என்ற
தகவல் இரண்டு கருத்துக்களாக உள்ளது. முதல் கருத்து நாயக்கர்
காலத்தில் கட்டப்பட்ட கோட்டை அப்படின்னு சொல்றாங்க,இரண்டாவது
கருத்து இந்த கோட்டையை கட்டினது யாருன்னே தெரியாது ஆனால்
இந்த கோட்டை சுல்தானிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக்
திரும்பவும் ஆங்கிலேயர்களிடமிருந்து சுல்தான் கைப்பற்றியுள்ளதாக ஒரு
தகவல் உண்டு. இந்தக் கோட்டைக்கு உள்ள ஒரு சிவன்
கோவில்,கல்யாணராமர் அப்படின்னு சொல்லக்கூடிய பெருமாள்
கோவிலும், ஒரு காளி கோவிலும் இருக்கிறது. இதில் நல்ல நிலையில்
இருக்க கூடியது சிவன் கோவிலும் பெருமாள் கோவிலில் தான், காளி
கோயிலை இப்பதான் புதுப்பித்து வருகிறார்கள். இந்தக் கோட்டைக்கு
உள்ள மிகப்பெரிய அரசவையும் இராணி தங்கிய இடமும் உள்ளது,இந்த
கோட்டைக்குள்ளேயே பீரங்கி மேடை இருக்கிறது,ஆனா இப்போ அது எந்த
இடத்துல இருக்குனு தெரியல.பல கட்டிடங்கள் இடிந்து போயிருக்கு,விறகு
வெட்டுபவர்கள் மட்டும்தான் இப்போ இந்த கோட்டைக்கு உள்ள
வராங்க,பல பேருக்கு இந்த மாதிரி ஒரு கோட்டை இருக்கு அப்படின்னு
தெரியாது இந்தக் கோட்டையைப் பற்றி விரிவான காணொளி TAMILAR
THADAM YouTube Facebook முகநூல் பக்கத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்டிருக்கும் மறக்காம பாருங்க இன்னும் பல அரிய புதிய
தகவல்கள் தொடர்ந்து Tamilar Thadam-த்தில் வந்துட்டேதான் இருக்கும்…
வாழ்க தமிழ் வளர்க தமிழ் நன்றி������

Leave a Reply