நரகாசுரனை கண்ணன் அழித்தற்கான பண்டிகை என்ற புராண கதை அனைவராலும் கூறப்படுகிறது. இது மாதிரி புராண கதைகளை உருட்டிவிட்டு பல உண்மையான காரணத்தை மறைத்துவிடுகிறார்கள்.
தமிழர்கள் பின்பற்றியது தமிழ் முனிவர்களின் நெறியைமட்டுமே, பிறப்பு இறப்பை கடந்து வாழ வேண்டுமென்பதே அந்நெறி. உதாரணம் வள்ளளார்,திருவள்ளுவர்,போகர்….. பல தமிழ் முனிகள் உள்ளனர்.
தீபாவளி – தீ+பா+வளி
தீ என்பது நெருப்பு புருவ மத்தியில் இருக்கும் அருட்பெரும்சோதி
பா என்பது பாக்கள், பாடல்கள் தமிழ் மரபில் அனைத்து இன்ப துன்பங்களிலும் பாடல் இடம் பெரும்.
வளி என்பது வளி மண்டலத்தை குறிக்கு வெற்றிடம்,கடவுள் இருக்கும் இடம்.
மனிதனாக பிறந்த அனைவரும் அருட்பெரும்சோதியை கண்டுணர வேண்டும்.,எப்படி? மூலாதாரத்தில் உள்ள உயிர் சக்தியை பாடல் மூலம் உச்சந்தலையில் (உச்சி – வளிமண்டலம்) ஏற்றி அதை உள்நாக்கில் சுரக்க வைக்க வேண்டும் அதுவே அமுது.(குண்டலினி யோகம்)
அமுது உண்டவர்க்கு மரணம் வராது. இதன் வெளிபாடே தீபாவளி,இது முழுக்க முழுக்க தமிழரின் வழிமுறையை கூறும் பண்டிகை.பிற்காலத்தில் இதில் நிறை சடங்கையும் கட்டு கதைகளையும் நிரப்பி உண்மையை மறைக்க முயல்கின்றனர்.
இப்பொழுது தீபாவளி என்ற சொல்லும் மாறி டிவாளி (Diwali) என்று உச்சரிக்கின்றனர்.மோகம் என்னும் நஞ்சு பரவி தமிழ் என்னும் அமுதை அழிக்க முற்படுகிறது உண்மையை உண்ர்ந்துகொள்க🙏.
உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ்க🧠
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🫂