தமிழ் மொழியின் விளக்கம்

தமிழ் > த + மி + ழ்

தித்திக்கும் திகட்டாத செந்தமிழ் மொழியை உருவாக்கியது ஆசீவக சித்தர்களே. தமிழ் எழுத்துக்கள் 10000 வருடத்திற்கு முன்பே உருவாக்கப்பட்டுவிட்டது.

தமிழ் மொழியின் எழுத்துக்கள் ஒலி வடிவில் பிறக்கும் இடத்தின் அடிப்படையிலும், ஒலியின் ஒலிப்பு அழுத்த வேறுபாடுகளின் அடிப்படையிலும், 

வல்லினம் – கசடதபற

மெல்லினம் – ஙஞணநமன

இடையினம் – யரலவழள

என மூவகை இனங்களாகப் பகுக்கப்படுகின்றன. இம்மூவகை இன எழுத்துக்களும் தமிழ் எனும் சொல்லில் பயின்று வருகின்ற பாங்கும் ஒரு சிறப்பாகும்.

வல்லினம் – த

மெல்லினம் – மி

இடையினம் – ழ்

உயிர்மெய்  உறவினைப் பகுத்தாய்வோம் 

தமிழ் > த + மி + ழ்

த் + அ > த

ம் + இ > மி

ழ் (உ) > ழ்

அடிவயிறு (உந்தி),மிடறு (கண்டம்),அண்ணம் (நாசியீற்று) எனும் மூவகை எழுத்துப் பிறப்பியல் நிலைகளின் கண் தோன்றும்.

த், ம், ழ் எனும் மெய்யெழுத்துக்களின் மீது ஊர்ந்த உயிர் எழுத்துக்களைக் காண்போம்.

த்‘ எனும் எழுத்தின் மீது ‘‘ கரமும்

ம்‘ எனும் எழுத்தின் மீது ‘‘ கரமும்

ழ்‘ எனும் மெய்யெழுத்தின் மீது கட்புலனாகும் வண்ணம் உயிர் எழுத்துக்கள் ஏதும் ஊர்ந்து வரவில்லையாயினும் மெய்யெழுத்துக்கள் யாவும் ‘‘ கரத்தினை விடுப்பொலியாகக் கொண்டவையாதலால், இம்மூன்றெழுத்துக்களின் மீதும் முறையே அகர, இகர, உகரம் ஊர்ந்து நின்றதாய் உணர்க.

ஆசீவக மெய்யியலார் எழுத்துக்களை, ஆணெழுத்து, பெண்ணெழுத்து, அலி எழுத்து எனும் பகுப்புக்களாகவும், அமிழ்த எழுத்து, நஞ்செழுத்து எனும் பகுப்புக்களாயும் பிரித்துக் கையாளுவர். தமிழ்த் துறவியர் மரபில் இவை இன்றுவரை கற்பிக்கப்பட்டு வரும் பாடமாகும்.

தமிழ் > த் + அம் + இழ்

மாந்த உடலில் நஞ்சு நிலை ஒவ்வோர் உவாவிலும் (திதி) உடலின் ஒவ்வோர் தானத்திற்கும் (இடம்) இடப்பெயர்ச்சியுறும்.

இவற்றை அறிந்து ஊழ்கம் பயின்றவர்தம் ‘அம்’ எனும் ஒலியினை உடைய அண்ணப் பகுதியிலிருந்து வெளிப்படும் மொழி என்று பொருள்படும். இழ்>இழி > ‘இழிதல்” எனும் சொல் வெளிப்படுதல் எனப் பொருள்படும்.

இதன் பொருளாவது நஞ்சு நிலைத் தானத்தையும் தமது ஊழ்க (யோக) வலிமையினால் அமிழ்த நிலைக்கு மாற்றவல்ல ஊழ்கிகளிடமிருந்து வெளிப்பட்ட மொழி எனப் பொருள் கோடலுமாம். இக்காரணம் பற்றியே பாவேந்தரும் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடினார்.

அதனைத் தருவிக்கும் வழி கீழ்வருமாறு

தமிழ் > த் + அம் + இ + ழ்

முதன்மாற்றாக > அம் + இ + ழ்+த்

அமிழ்த் (உ *) > அமிழ்து எனவரும்.

உகரம் குற்றியலுகரம், விடுப்பொலிக் கண்பிறந்த எழுத்துப் பேறு.தமிழ் அமிழ்தான வகையும், அமிழ்தே தமிழான வகையும் கண்கூடாம்.