சங்க காலத்தில் இருந்து சோழர்கள் காலம் வரை வணிகத்திற்கும், மக்கள் பயன்பாட்டிற்கும், உருவாக்கிய பெருவழிப் பாதைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
அதியமான் பெருவழி, ஆதன் பெருவழி, கொற்கைப் பெருவழி, பட்டினப் பெருவழி,கொங்குப் பெருவழி, வடுகப் பெருவழி, தஞ்சாவூர்ப் பெருவழி, இராசமகேந்திரன் பெருவழி, ராஜகேசரிப் பெருவழி, மகதேசன் பெருவழி, வீரநாராயணன் பெருவழி, சேரனை மேற்கொண்ட சோழன் பெருவழி, சோழமாதேவிப் பெருவழி, அரங்கம் நோக்கிய பெருவழி, இராசராசபுர பெருவழி, இராச இராசன் பெருவழி, இராசேந்திரன் பெருவழி, குலோத்துங்கன் பெருவழி, விளாங்குடையான் பெருவழி, கூழையானை போன பெருவழி, மேற்குநோக்கிப் போன பெருவழி, மேலைப் பெருவழி, வடுகப் பெருவழி, தடிகைப் பெருவழி, பட்டினப் பெருவழி என்று பல பெருவழிகளின் பெயர்கள் கிட்டியுள்ளன. போன்ற பல பெருவழிகள் அமைந்திருந்தன. இவ்வழிகள் மூன்று நான்கு கோல் அகலம் உள்ளவையாம். தூரத்தைக் குறிக்கத் துளையிடப்பட்ட மைல் கற்கள் இருந்தன. இவ்வழிகளில் ஆங்காங்கே படை வீரர்கள் காவலுக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். பெரும்பாடி காவல், சிறுபாடி காவல் என்ற அதிகாரிகள் உதவியுடன் வணிகம் தடை இன்றி நடந்து வந்தது. அவர்கள் தங்கிச் சென்ற இடங்களை தாவளம் என்றனர்.