சூரசம்ஹாரம் பொய்யான கதையா

ஆரிய புராண கதையால் எந்த உண்மையும் உயிரோடு இல்லை என்பதற்கு இந்த சூரபத்ம சம்காரமும் ஒன்று.

உண்மையில் எதற்கு இந்த விழா, முருகருக்கும் சூரனுக்கும் இடையில் நடந்தது என்ன? தெளிவான விளக்கதை இதில் காண்போம்.

சூரபத்மன் என்ற அரக்கன் தேவர்களை சிறைபிடித்து கொடுமைபடுத்தினான் அவனுக்குதக்க பாடம் புகட்ட முருகர் தன் சக்தியை காட்டி அவனை அழித்தார் என்பது புராண கதை.இந்த புராண கதைக்கு பின் இருக்கும் மெய்ஞானத்தை தெரிந்து கொள்க.

பதுமாசுரன் – பதுமம்+அ+சுரன்

பதுமாசுரன் என்பது : பதுமம் – நாபி, அ – அவா, சுரன் – கழித்து எழுதல். 

நாபியினிடமாய் அடங்காமல் எழும்பும் குணத்தை அடக்கியும், தடைப்பாதது பத்மாசுரனாகிய அவா/ ஆசை.

 கஜமுகம் என்பது மதம். 

சிங்கமுகம் என்பது மோகம். 

ஆசை,மதம்,மோகம் இவைகளை வெல்வது ஐந்தறிவாலும் உபசத்தியான ஐந்து சத்தியாலும் செய்ய முடியவில்லை. ஆதலால் சிவத்தால் தடைப்பட்டது. 

இந்த இடத்தில் முருகர் அழித்தது எப்படி எனில் ; ஐந்து சத்தியோடு அனன்னியமாகிய சுத்த அறிவு ஆற்றல் என்னும் அருட்சத்தியையுங் கூட்டிச் சுத்த அறிவே வடிவாகிய ஆறறிவென்னும் முகங்களோடு, சுத்தஞானம் சுத்தக்கிரியை என்னும் சத்தியுடன், கூர்மை பொருந்திய வேல் என்னும் விவேகத்தால், தயாவடிவாய் ஆசை மோக மதங்களை நாசம் செய்வது சூரசம்மாரம். 

மயில் என்பது மேற்படி தத்துவங்கள் நஷ்டமானாலும் அவற்றின் வரம்புமீறிய செயல் நெறிதவறுதல் ஒழுங்கு மாத்திரம் இருப்பது. 

பூர்வ வாசனாதிகள் பல வண்ணமாய் விரிந்து ஆடுவது இயல்பு ஆதலால், அவற்றை அசையவொட்டாது மத்தியல் ஏறி இருப்பதாகிய சுத்த அறிவே முருகர். மாயை என்பது மயில். இவ்வண்ணமே அண்டத்திலும் உண்டு. மேலும், நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் மணிபோல் ஓர் ஜோதியிருக்கின்றது. அந்த ஒளியே முருகர். 

இந்த முருகரே தமிழ் மரபின் முதல் முனிவர்.

தமிழர்களின் நெறியை அழிப்பதே ஆரிய கும்பலின் வேலை, உண்மையை தெரிந்து கொள்க… வாழ்க தமிழரின் நெறி…