You are currently viewing சிவாடி சிவன் கோவில்

சிவாடி சிவன் கோவில்

தர்மபுரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பழமையான கோவில்களில் இந்த சிவாடி சிவன்
கோவிலும் ஓன்று. தர்மபுரியில் இருந்து நல்லாம்பள்ளி வழியாக இந்த ஊருக்கு
செல்லலாம்,ஏரிக்கரை ஒட்டி வயல்வெளிகளுக்கு நடுவில் இந்த அழகான சிவன் கோவில்
இருக்கிறது. கோவில் முழுவதும் செங்கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது.கோவிலின்
வெளிப்புறத்தில் கல் மண்டபம் இருந்து அழிந்து போனதற்கான சான்றாக அந்த கல் தூண்கள்
சரிந்தும் புதைந்தும் கிடக்கிறது.நான்கு பிரம்மாண்ட உருளை வடிவ தூண்கள் உள்ளது, அதில்
ஒரு தூணில் மட்டும் கல்வெட்டு காணப்படுகிறது,ஒன்பது வரி கொண்ட இந்த கல்வெட்டில்
உள்ள தகவலானது மூன்றாம் இராசராசன் காலத்தில்,தகடூர் பகுதியை இராசராச அதியமான்
என்னும் குறுநில மன்னன் ஆண்டு வந்தான்,தகடூர் வியாபாரி கந்தன் ஜெயம்கொண்டான்
திருவண்ணாமலை உடையான் பரமேஸ்வர ஜெயபாலன் என்பவனுக்கு வேல்நங்கக்காரன்
அணைப் பகுதியில் 30 கண்டகம் விதைக்கும் நிலத்தைக் கொடுத்துள்ளான். அதனை
கந்தமுழான் தகடூர் செங்கணீஸ்வரமுடைய மகாதேவர் திருப்படி மாற்றுக்கு தேவதானமாக
விட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.கோவிலின் பின்புறம் சிறிய செங்கல் கட்டிடம்
கலைநயத்துடன் முற்றிலும் சிதைந்து உள்ளது.அதை உள்ளூர் மக்கள் ஜீவ சமாதி என்று
கூறுகிறார்கள். கருவறையில் சிவலிங்கமும் அம்மன் சிலையும் இருக்கிறது.மூன்றாவதாக
இருக்கும் சிலையின் கையில் செங்கோல் போன்ற அமைப்புடன் இருக்கிறது. செங்கணீஸ்வரம்
என்பது முதலாம் ராஜாதிராஜனின் தற்போதைய தர்மபுரி என்று கூறுகிறார்கள்.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் நன்றி����…

Leave a Reply