சங்க கால பெண் புலவர்கள்

சங்ககாலப் புலவருள் மெல்லியலாரும் இடம் பெற்றிருந்தனர். அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், கச்சிப் பேட்டு நன்னாகையார், கழார்க்கீரன் எயிற்றி, காக்கை பாடினியார், நச்செள்ளையார், நன்னாகையார், நெடும்பல்லியத்தை, பூங்கண் உத்திரையார், மதுரை நல்வெள்ளியார், வருமுலையாரித்தி, வெண்பூதி, வெண்மணிப்பூதி, வெள்ளிவீதி என்பவர் குறுந்தொகைப் பாடல்களுள் சிலவற்றைப் பாடிய பெண்பாற் புலவராவர். இவருட் சிலர் நெடுநில மன்னராலும், குறுநில மன்னராலும் பெரிதும் மதிக்கப் பெற்றவராவர். சங்ககாலப் பெண் கல்வி எந்த அளவு உயர்ந்த நிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை இப்பெருமாட்டிகளின் பாடல்களைக் கொண்டு இனிதின் அறியலாம்.