கொல்லிமலையில் பதிணென் சித்தர்கள் தவம் செய்த இரகசிய குகையை தேடி ஆபத்தான பயணம்
18 சித்தர்கள் தவம் செய்த ஒரு குகையை தேடி ஒரு ஆபத்தான பயணத்தை நான் மேற்கொண்டிருக்கேன். இப்ப நான் கொல்லிமலையில் இருக்கிறேன். இந்த குகை கொல்லிமலையில் இருக்கிறது.
என்னோட இந்த பயணம் காட்டு பகுதியில் ஆரம்பித்து ஒரு அழகான அருவியை தொடர்ந்து போகிறது. இந்த அருவி மிகவும் ஆபத்தானது, கரணம் தப்பினால் மரணம் வழுக்கி விழுந்த அவ்ளோ தான் இந்த அருவியை கடப்பது மிகவும் கடினமானதாக இருந்தது. இதை தொடர்ந்து மலை ஏற ஆரம்பிக்கிறோம், சுமார் 30அடி உயரத்தில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் ரொம்பவே ஆபத்தான ஒரு மலை ஏற்றம், எந்த இடத்தில் வலுக்கும் எந்த இடத்தில் வழுக்காது என்று சொல்ல முடியாது எந்த இடம் நல்ல இருக்கும்னு சொல்ல முடியாது. மீண்டும் ஒரு ஆற்றங்கரையை தொடர்ந்து பயணிக்கிறோம். இந்த ஆற்றங்கரையில் எப்ப தண்ணி அதிகமாகும் எப்ப குறையும்னு சொல்ல முடியாது திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்படும் வாய்ப்புள்ளது. சுமார் 2 மணி நேர பயணத்திற்கு பிறகு நாங்கள் அந்த குகையை அடைந்தோம், 18 சித்தர்கள் தவம் செய்த குகை. இந்த குகை பெரியதாக இல்லை , ஒருவர் தவம் செய்கிற அளவுக்கு தான் இருக்கிறது. இந்த குகையில் ஒரே நேரத்தில் நிறைய பேர் தவம் செய்திருக்க வாய்ப்பில்லை. தனித்தனியாக தான் தவம் செய்திருக்க முடியும்.
எனக்கு எப்படி இந்த இடம் தெரியும் அப்படி என்ற சுவாரசியமான தகவலை இப்பொழுது உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
எனக்கு சித்தர்கள் மேல் ஆர்வம் ஆரம்பித்த பொழுது நான் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன் அதில் ஒரு புத்தகத்தில் ஒரு பாடலை டிகோடடு (decode) செய்து இந்த குகையை கண்டுபிடித்தேன்.
யார் இந்த சித்தர்கள்?
1.சித்து வேலை செய்பவர்கள் சித்தர்கள்னு சொல்லுவாங்க
2.சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்கள் ஆவர்.
3.சித்து என்பது புருவம் மத்தியில் இருக்கும் 7 திரையை கிழித்து நெற்றி கண் திறந்தால் சித்தர்னு சொல்வார்கள்.
4. சிதம்பர ரகசியம் இது தான் கூட சொல்ராங்க, சித்து+அம்பரம்
சித்து=புருவம் மத்தி
அம்பரம்=நடராசரின் நடன உருவம், நெற்றி கண் வழிய இந்த நடராசரின் நடன உருவத்தைப் பார்த்தால் சித்தர் ஆகலாம்.
குகை அமைப்பு
இந்த குகை அளவில் சிறியது இந்த குகையில் உள்ளே ஏழு கன்னிமார்களும் ஒரு சிவலிங்கமும் உள்ளது.
என்னுடைய கருத்து இந்த இடத்திற்கு வரவேண்டாம் என்பதுதான் ஏன் அப்படி கூறுகிறேன் என்றால் இந்த மலை மிகவும் ஆபத்தானது மலை அருவி ஆற்றங்கரை இதையெல்லாம் கடந்து இந்த குகையை அடைவது மிகவும் கடினமானது. அதனால் தான் இந்த இடத்தின் location details பகிர்ந்து கொள்ளவில்லை.
அப்படி எவ்வளவு கடினமான பாதை இது அப்படின்னு தெரிஞ்சுக்கணும் இல்ல இந்த இடத்தை பாக்குறதுக்கு ஆசையா இருக்கு அப்படின்னா Tamilar Thadam youtube channel வீடியோவில் முழு பயணத்தையும் பதிவு செய்துள்ளேன் மறக்காமல் பாருங்க.
நன்றி