ஆசீவக சித்தர்களின் பார்வையில் எமன் யார்?,எங்கு உள்ளார்,ஏமனின் வாகனம் ஏன் எருமை!
எமன் என்றெழுதுவது சியானதல்ல யமன் என்பதே சரி.
யமன் – ய+ம்+அன் இதில் ய தமிழ் எண்னில் பத்தை (10) குறிக்கும்.
10 என்பது இரகசிய எண். இதன் பொருள் அறிந்தோரே மரணத்தை கடக்க முடியுமென்பர்.
யமன் என்பவன் நமனே அதாவது அவன் நம்முள்ளே இருக்கிறான்.
எமன் இருக்கும் இடம்.
தொண்டைக்குழியில் தான் யமன் உள்ளார்.நமது உணவில் நஞ்சு,அமுது இரண்டும் கலந்துள்ளது.நஞ்சு தொண்டையில் தங்கும்,நாளடைவில் அது கபமாக மாறி முதுமையை ஏற்படுத்தி மூச்சு சுழற்சியை நிறுத்தி மரணத்தை கொடுக்கும்.
பாசக்கயிறு.
புராண கதைப்படி பாசக்கயிறு கழுத்தில்தான் விழும் இதன் பொருள் தொண்டைக்குழியில் இருக்கும் கபத்தையே குறிக்கும்.
எருமை ஏன்?
எருமை பால்,தயிர் இது மாட்டு பாலைவிட அடர்த்தி அதிகம்.இதை செரிக்க அதிக படியான சக்தியை உடல் இழக்க நேரிடும்,அதனால் தான் யமனின் வாகனம் எருமை.