வள்ளற்பெருமானார் அருளிய மகாமந்திரம்
மகாமந்திரம் தனிப்பெருஞ் சிறப்புகள்
அ,இ, உ,எ,ஒ ஆகிய ஐந்து உயிர் எழுத்துகளும் அதி அற்புத இறை உயிர் ஒலியலைகள் நிரம்பப் பெற்றவை. இந்த ஐந்து உயிர் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டே மந்திரங்கள் அமையப் பெற்றுள்ளன.
ஐந்து உயிர் எழுத்துகளும் ( அ, இ, உ, எ, ஒ ) முழுமையாக அமையப்பெற்ற ஒரே மந்திரம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
என்னும் மகாமந்திரம் மட்டுமே.
மகாமந்திரம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வள்ளற் பெருமானாருக்கு அருளப் பெற்று பெருமானார் நமக்கு தனிப்பெருங்கருணையால் அருளினார்கள்.
உயிர் இனங்கள் அனைத்திற்கும் “அ” என்ற சொல்லோசையே உயிரின் உள்ளொலி ஆகும். மொழி, நிறம், தேசம், மதம் கடந்து தனித்தன்மையோடு விளங்கும் தனிப்பெரும் சிறப்புடையது “அ” ஒன்று மட்டுமே.
“அ” என்ற முதல் எழுத்தாலேயே அமையப் பெற்ற முழு மந்திரம்தான் மகாமந்திரம்.
தேகம் என்றும் மரணந்தவிர்த்து இளமையோடு இருக்க ஜீவ அணுக்கள் அருள் ஒளிபெற வேண்டும். அருள் ஒளியின் உற்பத்தியே மகாமந்திரம்தான்.
வரவு போக்கற்ற நிலை கை கூடவும், மூன்றாவது கண்ணாகிய ஞானக் கண் திறக்கவும். ஞானக் கண் திறந்து அருட்பெருஞ்ஜோதியின் ஆனந்த உயிர்நடம் காண வேண்டும். இதற்குத் திறவுகோல் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தை ஓதுதல் ஒன்று மட்டுமே.
உயிர் வளர் கலை ரகசியத்தை வெளிப்பட உணர்த்தும் மந்திரம் – மகாமந்திரம் மட்டுமே.
ஆதலின், அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தைப் புலை, கொலை தவிர்த்து மனத்தூய்மையோடு ஓதும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும். அதனால் உபகார சத்தி விளங்கும். அந்த உபகார சத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்.
மகாமந்திரத்தை ஓதும் முறை
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உணர்த்தியவாறு வள்ளற்பெருமானார் அருளிய
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
என்னும் இந்த மகாமந்திரத்தை நா ஒன்றினால் மட்டும் ஓதினாற் போதாது.
ஊன் ஓத வேண்டும் (இந்திரிய ஒழுக்க நிலை)
உள்ளம் ஓத வேண்டும் (கரண ஒழுக்க நிலை)
உயிர் ஓத வேண்டும். (ஜீவ ஒழுக்க நிலை)
உயிர்க்கு உயிராம் ஆன்மாவும் ஓத வேண்டும்
(ஆன்ம ஒழுக்க நிலை),
அத்துடன், அருட்பெருஞ்ஜோதி மீது காதலாகி ஓத வேண்டும்.
புருவ மத்தியில் ஜோதியை நினைந்து நினைந்து ஓத வேண்டும். நெகிழ்ந்து நெகிழ்ந்து ஓத வேண்டும். ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து ஒருமை உள்ளத்தோடு மகாமந்திரத்தை நா அசையாமல் ஓதுவது சாலச்சிறந்தது.
உடல். உள்ளம். உயிர். ஆன்மா
ஆகிய நான்கும் ஒருங்கிணைந்த உன்னத நிலையில் அருட்பெருஞ்ஜோதி மீது காதலாகிக் கசிந்து உருகி மகாமந்திரத்தை தொடர்ந்து ஓதி வந்தால் உயிர் அனுபவம், அருள் அனுபவம், அருட்பெருஞ்ஜோதி அனுபவம் பெற்று மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்.
The true mantra of God
Mahamantra blessed by Lord Vallaperuman
Mahamantra is unique
The five vowels A, E, U, A, O are full of wonderful divine vowel sounds. Mantras are based on these five vital letters.
All five vowels (a, e, u, a, o) are the only mantras that are fully formed
Arudperunjyothi Arudperunjyothi Thniperunkarunai Arudperunjyothi
Only Mahamantra.
Mahamantram Arudperunjyothi was blessed by Lord Vallat Perumanar who blessed us with his special grace.
For all living things, the word “a” is the vowel of life. There is only one “a” that is unique and unique beyond language, color, nation and religion.
A Mahamantra is a complete mantra consisting of the first letter “A”.
Life atoms should be blessed to be eternally young after death. Mahamantra is the production of grace light.
Gather the hand of indifference and open the third eye, the wisdom eye. Open the eyes of wisdom and see the blissful life of Arudperunjyothi. The key to this is Arudperunjyothi
Recitation of Mahamantra is only one.
Mahamantra is the only mantra to reveal the secret of life-giving art.
Therefore, when you recite the Arudperunjyothi Mahamantra with purity of mind, avoiding killing and killing, knowledge and love will stand together. So the upakara satti becomes clear. All benefits arise from that beneficial truth.
Method of reciting the Mahamantra
Lord Vallaperumana blessed him as the Lord Arudperunjyothi had told him
Arudperunjyothi Arudperunjyoti
Arudperunjyothi is a special blessing
This Mahamantra is only by one na
Reading is not enough.
Oon should be recited (Sense Discipline)
The soul must recite (Karana moral state).
Life should be recited. (moral status)
Life to life and soul to recite
(moral condition),
Also, fall in love with Arudperunjyothi and recite.
Remember to recite the Jyothi between the eyebrows.
Recite flexibly and flexibly.
It is best to recite the Mahamantra with oneness of mind so that the body becomes wet with the tears that flow.
Body. the soul Life.
the soul If all these four are united and melt in love with Arudperunjyothi and continue to recite the Mahamantra, one can get life experience, grace experience, Arudperunjyothi experience and live in immortality.