சிலப்பதிகாரத்தில் வரும் இடாகினி பேய்க்கு சிலை வைத்து காளியாக வழிபடும் மக்கள்

மாலதி என்னும் ஒரு பார்ப்பனி பெண் மாற்றாள் குழந்தைக்குப் பசுவின் பாலைச் கொடுக்கும் போது, பால் விக்கியதால், அவள் கையிலேயே குழந்தை இறந்துவிடும்.என் கணவனும் மாற்றாளும் என் மேல் அடாப்பழி கூறுவரே,இதற்கு என்செய்வேன்!’ என்றேங்கிய அக்குழந்தையை கையில் ஏந்தி பல கோவில்களுக்கு சென்று கைகூப்பி ‘தெய்வங்களே!எம்முடைய இக்கொடிய வருத்தத்தை நீக்குமின்‘ என இரந்தாள்.
ஒரு தெய்வமும் தராமையின் அங்கெங்கும் நில்லாமல் சாத்தன் கோயிலை அடைந்து அவனை வேண்டி வரங்கிடந்தாள்.
அருகில் இருந்த சுடுகாட்டில், இடுபிணங்களைத் (புதைக்கப்பட்ட பிணம்) தின்னும் இடாகினிப் பேய்,வடிவுடைய (அழகான) ஓர் இளம் பெண்ணாக,மிகுந்த இருள் நேரத்திலே மாலதியிடம் வந்து, ‘குற்றமில்லாதவளே! முற்பிறவி புண்ணியம் புரியாதவர்க்குத் தெய்வம் வரங்கொடுப்பதில்லை. இது பொய்ம் மொழியன்று; மெய்ம்மொழியே’ என்று கூறினாள்.பிறகு, ‘உன் கையிலிருக்கும் குழந்தையை கொடு; என்று சொல்லிக்கொண்டே அக்குழந்தையை பிடுங்கி அவள் கண்முன்னே விழுங்கிவிட்டாள்.
இக்கொடுமையைக் கண்ட மாலதி, இடியொலி கேட்ட மயில்போல ஏங்கியழுதாள். அவள் நிலைக்கிரங்கிய சாத்தன், ‘அன்னையே! நீ ஏங்கி அழாதே.நீசெல்லும் வழியிலே உயிருடன் கிடக்கின்ற குழந்தையைக் காண்பாய்’ என்று கூறினார். ஏங்கியழுதுகொண்டிருந்த அவள் அந்த மாயக் குழந்தையை ஐயங்கொள்ளாமல் தன் குழந்தையென எண்ணி எடுத்து வயிற்றிலே அணைத்துக் கொண்டுபோய்த் தன் மாற்றாள் கையிலே கொடுத்தாள்.
இந்த காதையில் வரும் இடாகினி பேயை உள்ளூர் மக்கள் காளி ஆத்தா என்றழைக்கின்றனர். கால்நடைகளின் காய்ச்சலை சரிசெய்யும் எனவும்,வேண்டியதை கொடுக்கும் எனவும் செல்கின்றனர்.இதன் அருகிலேயே பல்லவர் கால கொற்றவையும் உண்டு. விழுப்புரம் மாவட்டத்தில் திருகோவிலூர் அருகே மாரங்கியூர் என்ற இடத்தில் உள்ளது. Location.
சிலப்பதிகாரத்தில் 12 கலிப்பாகள்,18 ஆசிரியப்பாக்கள் உண்டு. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று,இயலிசை நாடகக் காப்பியம்.